நோபல் பரிசை தட்டிச்சென்ற அமெரிக்க விஞ்ஞானிகள்.. எதை கண்டுப்பிடித்தார்கள் தெரியுமா?

2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

Oct 7, 2024 - 21:28
 0
நோபல் பரிசை தட்டிச்சென்ற அமெரிக்க விஞ்ஞானிகள்.. எதை கண்டுப்பிடித்தார்கள் தெரியுமா?

2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டும் தனித் தனித் துறைகளில் சிற்ந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ எனப்படும், மரபணுக்களில் செயல்பாடுகள் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை நிர்வகிக்கும் அடிப்படையை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததை கௌரவிக்கும் விதமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உடலில்  ஒவ்வொரு செல்லிலும் ஒரே மாதிரியான மரபணுக்கள் உள்ளன. இருந்தாலும், தசை மற்றும் நரம்பு செல்கள் போன்ற பல்வேறு செல் வகைகள் மிகவும் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன, இந்த வேறுபாடுகள் எவ்வாறு உருவாகின்றன என்ற கேள்விக்கான பதில் மரபணு ஒழுங்குமுறையில் உள்ளது. உயிரினங்கள் எப்படி உருவாகிறது மற்றும் செயல்படுகிறது என்பதற்கு மைக்ரோ ஆர்.என்.ஏக்கள் முக்கியமானது. இதனை பற்றிய ஆய்வையே  விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு நோபல் பரிசுடன் சேர்த்து 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரௌன்ஸ் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள தேர்வு குழு இந்த விருது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கள்: வான் சாகச நிகழ்ச்சியில் நடந்த சோகம்.. முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை

 விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கனும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் 2024ம் ஆண்டின் இயற்பியல், வேதியியல், உடலியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow