GOAT UPDATE:  ”படத்தில் தோனி இருக்கார்... ஆனா இல்ல...” Confusionக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு!

GOAT UPDATE: தளபதி விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தில் ’தல’ தோனி நடித்துள்ளதாக பரவும் தகவல் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார். 

Sep 3, 2024 - 07:30
Sep 4, 2024 - 10:11
 0
GOAT UPDATE:  ”படத்தில் தோனி இருக்கார்... ஆனா இல்ல...” Confusionக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு!

இயக்குநர் வெங்கட் பிரபு – தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் விஜய்யின் 68வது படமான தி கோட், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. விஜய் அரசியலுக்குள் நுழைந்ததால் நடிப்பிற்கு முழுக்கு போட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் அப்செட்டான ரசிகர்கள் அவரை அரசியலுக்கு மகிழ்வோடு வரவேற்றுள்ளனர். எனவே தளபதி நடிப்பில் கடைசியாக தி கோட் மற்றும் தளபதி 69 திரைப்படங்கள் மட்டும் தான் வெளியாகும் என்பதால், ரசிகர்கள் இப்படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். பொதுவாகவே விஜய் படங்களுக்கு என்ற எதிர்பார்ப்பை தாண்டி தி கோட் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு என்பது எகிறியுள்ளது. இதற்கு காரணம் விஜய்யின் இளம்வயது முகத்தை DeAging மூலம் கொண்டு வந்தது தான். ஆதலால் தளபதியைத்தாண்டி இளையதளபதியை காண ஆவலாக இருக்கின்றனர் தளபதி ரசிகர்கள். 

மறுபக்கம் கேமியோக்களும் அதிக அளவில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்றே சொல்லவேண்டும். மறைந்த நடிகரும் தேமுதிகக தலைவருமான கேப்டன் விஜயகாந்தை AI என்று அழைக்கப்படுகின்ற ஆர்டிஃபிஷியல் இண்டலிஷன்ஸ் மூலம் கொண்டுவந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதைத்தாண்டி இன்னும் சில சர்ப்ரைஸ் கேமியோக்கள் இப்படத்தில் வரும் என்று ஹிண்ட் கொடுத்துள்ளது படக்குழு. அதில் ஒரு ஹின்ட் தான், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘தல’ தோனி இப்படத்தில் வருவார் என்று கூறப்பட்டது. அதற்கேற்றார்போல், தி கோட் படத்தின் டிரைலரிலும் சென்னை – மும்பை அணி இடையிலான போட்டி நடக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. என்னது தளபதி படத்தில் ’தல’யா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில்,ம் தி கோட் படத்தில் ‘தல’ தோனி நடித்துள்ளாரா? இல்லையா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு. அதாவது, தி கோட் திரைப்படத்தில் தல தோனியை நடிக்க வைக்கவேண்டும் தனக்கு ஐடியா இருந்ததாகவும், ஆனால் அதை தாங்கள் நடைமுறைபடுத்துவதற்குள் அந்த தகவல் லீக் ஆகிவிட்டதாகக் கூறினார். அதோடு, தாங்கள் யோசனை செய்த பல்வேறு விஷயங்கள் உடனுக்குடன் சோஷியல் மீடியாவில் லீக்காகி வைரலாகியதால், இந்த ஐடியாவை டிராப் செய்ததாக வெங்கட் பிரபு தெரிவித்தார். இதனால்தான், தி கோட் படத்தில் ஐபிஎல் போட்டி நடப்பது போன்ற காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகவும், முக்கியமாக தல தோனி சிக்ஸ் அடித்த ஷாட்களை பயன்படுத்தியுள்ளதாகவும், அது மக்களுடன் எளிதில் கனெக்ட்டாகிவிடும் என்றும் கூறினார். 

என்னத்தான் தி கோட் திரைப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, படத்திற்கான ஹைப்களை அதிகமாக வைத்துக்கொள்ள வேண்டாம் என்று சொன்னாலும், படக்குழுவை சேர்ந்தவர்கள் சில ஹிண்டுகளை கொடுத்து படத்திற்கான ஹைப்களை ஏற்றியுள்ளனர் என்பதே நிதர்சனம்.

இன்னும் 2 நாட்களில் ரிலீஸாகும் வெங்கட் பிரபுவின் ஹீரோவான ‘தி கோட்’ அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து ஜெயிப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow