அடடே..பள்ளிக்கூட காதலா..?! கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்..?

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலனை விரைவில் கரம்பிடிக்கப்போகிறாராம். யார் அந்த லக்கி மேன்? பள்ளிக்கூடத்தில் இருந்தே காதலா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

Nov 20, 2024 - 06:44
 0
அடடே..பள்ளிக்கூட காதலா..?! கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்..?

தயாரிப்பாளர் சுரேஷ் மேனன், நடிகை மேனகா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் இது என்ன பாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடரி, ரஜினி முருகன், மகாநடி, ரெமோ, சர்க்கார், சாணிக் காயிதம், பெண்குயின் ஆகிய projectகளில் நடித்து குறுகிய காலக்கட்டத்திலேயே டாப் ஹீரோயினாக உயர்ந்தார். இப்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்-ஆன பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார் கீர்த்தி.

டாப் ஹீரோயின் என்றாலே கிசுகிசு என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத், காமெடி நடிகர் சத்தீஷ், ஆகியோருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார் கீர்த்தி. ஆனால் அதெல்லாம் கட்டுக்கதையானது. சரி கீர்த்தி உண்மையாவே சிங்கிள் தான் போல என நம்பி அவரை பார்த்து ’உன் மேல ஒரு கண்ணு..’ என தமிழ்நாட்டின் இளைஞர்கள் உருகி உருகி பாடிக்கொண்டிருந்த வேலையில் தான்,  ’நான் எப்போ சிங்கிள்னு சொன்னேன்’ என ஒரு நேர்காணலில் கூறி தமிழ் இளைஞர்களின் மனதை நொறுக்கினார் கீர்த்தி. 

இந்நிலையில், கீர்த்தியின் திருமணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒன்றல்ல, ரெண்டல்ல, முழுசா 15 வருடமாக உருகி உருகி காதலித்த ஒருவரை கூடிய விரைவில் கீர்த்தி சுரேஷ் 
 மணக்கப்போகிறாராம். தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டில் தற்போது தொழிலதிபராக இருக்கிறார். இருவரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்ததாகவும், அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் திருமணத்திற்கான வேலைகள் சைலண்ட்டாக நடைபெற்று வருகிறதாம். வரும் டிசம்பர் 12ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் அன்று கோவாவில் இவர்களுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 இந்நிகழ்வில் நெருங்கிய நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்க கீர்த்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் குறித்தான அறிவிப்புகளை கீர்த்தி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க: விஜய் போட்ட உத்தரவு .. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த த.வெ.க நிர்வாகிகள்..!

’எது எப்படியோ நல்லா இரும்மா’ என கீர்த்தியை வாழ்த்தும் ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ’உங்க கல்யாணம் எந்த ஓடிடில வரும்?’ என  சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow