‘விடுதலை -2’ திரைப்படத்தை இதில் வெளியிடக் கூடாது.. நீதிமன்றம் வைத்த செக்

'விடுதலை 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெயிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dec 19, 2024 - 18:08
 0
‘விடுதலை -2’ திரைப்படத்தை இதில் வெளியிடக் கூடாது.. நீதிமன்றம் வைத்த செக்
’விடுதலை -2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த பாகத்தில் சூரி முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில் ஒரு சில காட்சிகளில் மட்டும் விஜய் சேதுபதி தோன்றினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர், கெளதம் மேனன், ராஜீவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இந்த பாகத்திற்கும் தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் எட்டு நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெற்றி மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ’விடுதலை 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, இந்த படத்தை சட்டவிரோதமாக ஆயிரத்து 700 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ’விடுதலை 2’ பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜராஜ விஜயன் சுப்ரமணியம்,  உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் ’விடுதலை-2’ படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். 

இதையடுத்து, ‘விடுதலை-2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow