Actor Dhanush Will Act In Avengers Doomsday Hollywood Movie : தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி ரிலீஸான ராயனுக்கு சில நெகட்டிவான விமர்சனங்கள் வெளியான போதும், தனுஷ் ரசிகர்களால் இத்திரைப்படம் சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. தனுஷ் இயக்கிய இரண்டாவது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ், ஏஆர் ரஹ்மான், எஸ்ஜே சூர்யா, சன் பிக்சர்ஸ் என பிரம்மாண்டமான கூட்டணியில் வெளியான ராயன், உலகம் முழுவதும் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ராயனை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். அதேபோல், சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்திலும் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் உருவாகும் குபேரா, அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோபிக் படத்திலும் தனுஷ் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சீக்கிரம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தியிலும் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்நிலையில், தனுஷுக்கு மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் படத்தில் நடித்திருந்தார் தனுஷ். கேமியோ ரோலாக இருந்தாலும் தனுஷுக்கு முக்கியமான கேரக்டராக இது அமைந்திருந்தது. அதேபோல், ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கவுள்ள அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ராபர்ட் டவுனி ஜூனியர் லீட் ரோலில் நடிக்கும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.
மேலும் படிக்க - பிக் பாஸ் சீசன் 8-ல் கமலுக்குப் பதில் சிம்பு..?
இந்தப் படத்திற்காக ஹாலிவுட் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது கோலிவுட் ரசிகர்களையும் எதிர்பார்க்க வைத்துள்ளனர் ருஸ்ஸோ பிரதர்ஸ். தி கிரே மேன் போல இல்லாமல், அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் தனுஷுக்கு மிக முக்கியமான கேரக்டர் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சீக்கிரமே அபிஸியல் அப்டேட்ஸ் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்வெள் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க மீட்டிங்கில், தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதாவது, அவர் அட்வான்ஸ் வாங்கிய தயாரிப்பாளரின் படத்தில் நடிக்காமல், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகிவிடுகிறார். இதனால் வரிசைப்படி முதலில் கமிட்டான தயாரிப்பாளருக்கு அவர் கால்ஷீட் கொடுப்பதில்லை. தனுஷ் தொடர்ந்து இவ்வாறு செய்துவருவதால், அவரை புக் செய்யும் தயாரிப்பாளர்கள், சங்கத்தை தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டு இருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, தனுஷுக்கு சப்போர்ட்டாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஹாலிவுட் செல்லும் தனுஷ்..!#kumudam | #kumudamnews | #kumudamnews24x7 | #Hollywood | #Dhanush | @dhanushkraja | #TamilCinema | #cinemaupdate | #Movies | #viral | #Trending | pic.twitter.com/PF64dMuqWy
— KumudamNews (@kumudamNews24x7) August 6, 2024