Bigg Boss Next Host: பிக் பாஸில் இருந்து விலகிய கமல்ஹாசன்... அடுத்த ஹோஸ்ட் யாருன்னு தெரியுமா..?
Who is the Next Bigg Boss Tamil Host: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துவிட்டார். இதனால் இந்நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்கவுள்ளது யார் என ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Who is the Next Bigg Boss Tamil Host: தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் இந்தாண்டுக்கான 8வது சீசன் தொடங்கவுள்ளது. கமலின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் அவர் வேறு வழியே இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அப்போது சொல்லப்பட்டது. அதேநேரம் அரசியலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் பெரிதாக ரீச் ஆகவில்லை. இதன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய Income source என கமல் அதில் செட்டில் ஆகிவிட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
முக்கியமாக கமல் போன்ற முன்னணி நடிகர் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாமா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கெல்லாம் அசராத ஆண்டவர், தொடர்ந்து 7 சீசன்களை தொகுத்து வழங்கினார். கமலின் காஸ்ட்யூம், ஒவ்வொரு வாரமும் அவர் செய்யும் புத்தக பரிந்துரை ஆகியவை ரசிகர்களிடம் ரீச் ஆனது. இதனால் ஒருகட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இடையில் கமலுக்குப் பதிலாக சிம்பு, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒருசில எபிசோட்களை மட்டும் தொகுத்து வழங்கினர்.
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்துவிட்டார். இனிமேல் அவருக்குப் பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்து சிம்பு தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் தீவிர ரசிகனான சிம்பு, பின்னர் தளபதி விஜய்யுடன் நெருக்கம் காட்டினார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாயகன் கமல்ஹாசனின் தம்பியாக வலம் வருகிறார் சிம்பு. விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கெத்து காட்டினார் சிம்பு.
மேலும் படிக்க - பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன்
அப்போது கமல் நடிப்பில் ஹிட்டான ஒரு படத்தின் இரண்டாம் பாகம் அல்லது ரீமேக்கில் நடிக்க ஆசை என சிம்பு கூறியிருந்தார். ஆனால், கமல்ஹாசனோ, “தம்பி சிம்பு என்னுடன் இணைந்து நடிக்க வேண்டும்” என தக் லைஃப் கொடுக்க, கடைசியில் அது தற்போது உண்மையாகிவிட்டது. ஆம்! அதன்படி மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் சிம்பு ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இப்படி தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல, பிக் பாஸிலும் கமலின் இடத்தை நிரப்பு சிம்பு தான் சரியாக இருப்பார் என ஒரு பேச்சு அடிப்பட்டுள்ளது.
கமல்ஹாசனே பிக் பாஸ் குழுவினரிடம் சிம்புவை தான் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பிக் பாஸ் குழுவும் ஓக்கே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இதுபற்றிய உண்மையான நிலவரம் இதுவரை தெரியவில்லை. சிம்புவுக்கு ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக்சஸ்க்கு அவரது ஃபேஸ் வேல்யூ உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக 2கே கிட்ஸை வளைத்துப்போட சிம்பு தான் சரியான சாய்ஸ்ஸாக இருப்பார் எனத் தெரிகிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கவிருப்பதால், விரைவில் அதன் ஹோஸ்ட் யார் என்பது அபிஸியலாக அறிவிக்கப்படவுள்ளது.
இனி நான் Bigg Boss-க்கு வர மாட்டேன் - கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!#biggboss8 #biggbosstamil #kamalhaasan #breakingnews #kumudamnews #kumudamnews24x7 pic.twitter.com/hTtu6EINx0 — KumudamNews (@kumudamNews24x7) August 6, 2024
What's Your Reaction?