Chennai Car Race : சென்னையில் இன்று தொடங்கும் Formula 4 கார் பந்தயம்... போக்குவரத்து மாற்றம்!

Formula 4 Car Race Starts Today in Chennai : சென்னையில் இன்று மதியம் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கார் ரேஸ் நடைபெறும் பகுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

Aug 31, 2024 - 06:52
Aug 31, 2024 - 18:34
 0
Chennai Car Race : சென்னையில் இன்று தொடங்கும் Formula 4 கார் பந்தயம்... போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் இன்று தொடங்கும் பார்முலா 4 கார் பந்தயம்

Formula 4 Car Race Starts Today in Chennai : சர்வதேச அளவில் ஃபார்முலா கார் பந்தயங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இப்போட்டிகளை கோடிக்கணக்கான ரசிகர்கள் விரும்பி பார்க்கும் நிலையில், முதன்முறையாக சென்னையில் ஃபர்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டி, இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில், இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாகவும் சென்னை திகழ்கிறது. 

இந்தப் போட்டியானது தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டிகள் இரவு வரை நடைபெறவுள்ளது. இதில், JK FLGB F4, F4 Indian Championship, Indian Racing League ஆகிய பந்தயங்களுக்கான பயிற்சி சுற்றும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. 

அதேபோல், செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் பந்தயம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், JK FLGB F4, F4 Indian Championship, Indian Racing League ஆகிய பந்தயங்கள் நடைபெறுகின்றன. இதனிடையே சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. ஃபார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு இன்று முதல் நாளை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் போட்டிக்கான இறுதிகட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், “தெற்காசியாவிலேயே முதன்முறையாக நடைபெறுகிற Formula 4 Chennai on Street Racing Circuit – Night Race போட்டி சென்னை தீவுத்திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. 

மேலும் படிக்க - களை கட்டும் கார் ரேஸ்... யாரெல்லாம் பார்க்க முடியும்... எதற்கெல்லாம் கட்டுப்பாடு?

இப்போட்டிக்காக தமிழ்நாடு அரசு, மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தோம். போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் – பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands, மாண்புமிகு அமைச்சர்கள் – நீதியரசர்கள் - அதிகாரிகளுக்கான Galleries, Race Drivers’ Stand – Garage போன்ற வசதிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் அதுதொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தோம். மேலும், ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கான வழிகள் – சிகிச்சையிலிருப்போர், மருத்துவமனை செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தோம். 

சென்னையில் நடைபெறுகிற இந்த Formula 4 போட்டியினைத் திட்டமிட்டபடி சிறப்பாகவும் – பாதுகாப்புடனும் – மக்கள் மகிழும் வண்ணமும் நடத்திட சென்னை மாநகராட்சி – காவல்துறை - உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் – அலுவலர்களை வலியுறுத்தினோம். Formula4 Chennai On Street Racing Circuit புது வரலாறு படைக்கட்டும்!” என பதிவிட்டுள்ளார். ஃபர்முலா 4 கார் பந்தயத்தை பார்வையிட செல்லும் ரசிகர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளும் அரங்குக்குள் எடுத்து வரக் கூடாது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow