New Vande Bharat Express Train : புதிய வந்தே பாரத் ரயில் சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
New Vande Bharat Express Train in Tamil Nadu : நாகர்கோவில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கி வைக்கிறார்.
New Vande Bharat Express Train in Tamil Nadu : அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் முதன் முதலாக இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதிவேகம், சொகுசான இருக்கைகள், ஏசி வசதி, பயோ டாய்லட், ஆட்டோமெட்டிக் கதவுகள், சாய்வு இருக்கைகள் என வந்தே பாரத் ரயில்களில் சொகுசு வசதிகள் இருந்ததால் இவை மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் சுமார் 60 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரை சென்னை - பெங்களூர், சென்னை - கோவை, சென்னை- நெல்லை, கோவை - பெங்களூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. சாதாரண ரயில்களை விட வந்தே பாரத் ரயில்கள் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்பதால் இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே ஒப்புதல் அளித்ததாகவும், ஜூன் மாதம் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை தொடங்க்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களுக்காக மோடியின் சென்னை பயணம் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டதால் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கப்படவுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாலியாகத் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் படிக்க: மரபிசையின் AI வெர்ஷன்... இளைஞர்களின் இசை மீட்பர்... HBD யுவன் சங்கர் ராஜா!
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “சென்னை - நாகர்கோவில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் பெங்களூரு - மதுரை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை இருக்கும். இதனை பிரதமர் மோடி இன்று காணொளி வாலியாகத் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை சென்டிரலில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?