திடீரென சரிந்து விழுந்த புறக்காவல் நிலையம். மெரினாவில் பரபரப்பு
புயல் காரணமாக அதிவேகமாக காற்று வீசியதால் சென்னை மெரினா புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஃபெஞ்சல் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து வருகின்றனர். இருந்தாலும், அதிகனமழையால் குடியிருப்பு பகுதிகள், சுரங்கபாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மேலும், பயணிகளின் பாதுகாப்பு கருதி மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பாடு மற்றும் வருகைபாடும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் நாடு அரசு முகாம்களில் தங்க வைத்துள்ளன. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளை தெரிவிக்க வார் ரூம் தொலைபேசி எண்களும் அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் படகு மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். அதிவேகமான கற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. மழையின் காரணமாக பிராட்வே பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தி.நகர் பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக வீசிய பயங்கரமான காற்றால் மெரினா சர்வீஸ் சாலை லூப் சாலை சந்திப்பில் அமைந்துள்ள மெரினா புறக்காவல் நிலையம் (Police Booth) சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?