Chennai Car Race: களை கட்டும் கார் ரேஸ்... யாரெல்லாம் பார்க்க முடியும்... எதற்கெல்லாம் கட்டுப்பாடு?

சென்னையில் முதன்முறையாக ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியை யாரெல்லாம் பார்க்கலாம், என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை இங்கே முழுமையாக பார்க்கலாம்.

Aug 30, 2024 - 19:53
 0
Chennai Car Race: களை கட்டும் கார் ரேஸ்... யாரெல்லாம் பார்க்க முடியும்... எதற்கெல்லாம் கட்டுப்பாடு?
Chennai Car Race

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம், சென்னையில் ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் நாளை (ஆகஸ்ட் 31), செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட் - தீவு திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை (ஆகஸ்டு 31) நடைபெறும் பந்தயம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், JK FLGB F4, F4 Indian Championship, Indian Racing League ஆகிய பந்தயங்களுக்கான பயிற்சி சுற்று நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சாகச நிகழ்ச்சியும் தகுதி சுற்றும் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் பந்தயம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், JK FLGB F4, F4 Indian Championship, Indian Racing League ஆகிய பந்தயங்கள் நடைபெறுகின்றன. இதனிடையே சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

நாளை நடைபெறும் முதல் நாள் போட்டியில், ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளை பார்க்கச் செல்லும் ரசிகர்கள் பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருட்களையும் அரங்கிற்குள் எடுத்துச் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்டு திரும்பத் தரப்படமாட்டது. அதேபோல், புகையிலைப் பொருட்கள், தீப்பெட்டிகள், பட்டாசுகள். எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம், பிளேடுகள், கத்திகள், கத்தரிக்கோல், ஆயுதங்கள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள், எந்த வகையான திரவங்களுடனும் உள்ள பாட்டில்கள், துப்பாக்கிகள், சுவிஸ் இராணுவ கத்திகள். லேசர் லைட்டுகள், லைட்டர்கள், மின்-சிகரெட், வேப்ஸ் போன்றவை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. 

அதேபோல், வழிகாட்டி நாய்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை விலங்குகள் தவிர, ஒலி அமைப்புகள், ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகா ஃபோன்கள், இசைக் கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், போதைப் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாது. மேலும், போட்டி நிகழ்வில் போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதோடு, ஏதேனும் விதிமீறல்களில் ஈடுபட்டால் காவல்துறை நவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம் உபகரணங்கள், கூடாரங்கள், ஸ்லிப்பிங் பேக்ஸ், குடைகள் அல்லது நிழல் கட்டமைப்புகள் போன்றவைகளுக்கும் அனுமதி இல்லை. 

மேலும், கண்டைனர், தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டின்கள், கேன்கள், ட்ரோன்கள் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பறக்கும் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை ஆடியோ ரெக்கார்டிங் உபகரணங்கள், தொழில்முறை ஜூம் லென்ஸ்கள், ஸ்டாண்டுகள். மோனோபாட்கள், ட்ரைபாட்கள், செல்ஃபி ஸ்டிக்ஸ் உள்ளிட்ட பிற வணிக உபகரணங்களுக்கும் அனுமதி இல்லை. அதேநேரம் இவைகளை ஊடகத்தினர் பயன்படுத்திக்கொள்ளலாம்.  

மேலும் படிக்க - தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிபந்தனை.. பரபரப்பு கடிதம்!

தனியர் வாகனங்கள், ஸ்கேட் போர்டுகள், ரோலர் பிளேடுகள், ஸ்கூட்டர்கள். சைக்கிள்கள், வண்டிகள் அல்லது தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்றவை அனுமதி இல்லை. விற்பனையாளர் ஊர்திகள் எந்த வகையிலும் அனுமதி இல்லை. தனிப்பட்ட பொருட்கள், உபகரணங்கள், கைப்பைகள், குடைகள், லேப்டாப், லேப்டாப் பேக், சூட்கேஸ், பெரிய மின்விசிறிகள், மோட்டார். தலைக்கவசங்கள் போன்றவைகளுக்கும் அனுமதி இல்லை. மேலும், தண்ணீர் பலூன்கள், முட்டை, பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள், இழிவு அடையாளங்கள் அல்லது பதாகைகள், ஜாதி, மதம், பாலினம், இனத்திற்கு எதிரான புண்படுத்தும் பதாகைகள் அல்லது தவறான பாரபட்சமான மொழி, ஸ்ப்ரே பெயிண்ட்ஸ், ஃபேண்டம் ஸ்டிக் லைட்ஸ், ஹாம்மோக்ஸ். டோடெம்ஸ் போன்றவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow