Weight Loss Diet : எடை குறைக்க உதவும் காலை உணவுகள்... சிக்குனு ஸ்லிம் ஆக இதை ஃபாலோ பண்ணுங்க!

Breakfast Foods Diet for Weight Loss To Cut Down Fat : காலை நேரத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Aug 26, 2024 - 08:33
Aug 26, 2024 - 17:12
 0
Weight Loss Diet : எடை குறைக்க உதவும் காலை உணவுகள்... சிக்குனு ஸ்லிம் ஆக இதை ஃபாலோ பண்ணுங்க!
எடை குறைக்க உதவும் காலை உணவுகள்

Breakfast Foods Diet for Weight Loss To Cut Down Fat : தற்போதைய மோசமான உணவு பழக்கங்களாலும், மதுபழக்கம், புகைப்பழக்கம் உள்ளிட்டவையாலும் இளம் வயதிலேயே எடை அதிகரிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவழித்து மாங்கு மாங்குவென்று ஜிம்முக்கு போவதற்கு பதிலாக சிம்பிள் டயட் மூலம் வீட்டிலேயே உங்களது உடல் எடையை குறைக்கலாம். பொதுவாகவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நொறுக்குத்தீனியை முற்றிலும் தவிர்த்துவிட்டு மூன்று வேளை சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு பக்கமிருக்க மறுபக்கம் சரியான தூக்கம் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 7 - 8 மணி நேரம் தூங்க வேண்டும். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு ஸ்ட்ரெஸ் காரணமாக உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகரித்து உடல் எடை கண்டபடி அதிகரிக்கக்கூடும். 

பொதுவாகவே உடல் எடை குறைப்பதில் காலை உணவுகள் ஒரு பெரும் பங்காற்றுகிறது. காலை நேரத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கீழே பார்க்கலாம். 

1. இட்லி - சாம்பார்: 

அரிசி மற்றும் உளுந்திலிருந்து தயாராகும் இட்லியில் கொழுப்பு மிகவும் குறைவாக இருக்கும். மேலும் வேக வைத்த உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுவதாக டயட்டீசியன்கள் கூறுகின்றனர். இட்லி கூடவே பருப்பு, காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால்..... ஆஹா..... சுவைக்கு சுவையும் ஆச்சு... உடல் எடையும் எளிதாக குறைக்கலாம்! 

2. பழங்கள்: 

காலை வேளையில் பழங்களை சாப்பிடுவது மிக நல்லது. பொதுவாகவே பழங்கள் மற்றும் காய்கள் கலோரி அளவை அதிகரிக்காமல் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின்களும் தாதுக்களும் அதிகமாக உள்ளன. காலை உணவில் பழங்களை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு உடல் எடையும் வேகமாக குறையத் தொடங்கும். 

3. ஓட்ஸ்: 

ஓட்ஸில் ஃபைபர் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இது வயிற்றுக்கு நிறைவான உணர்வை தருவதோடு ரத்த சர்க்கரை அளவையும் சீராக வைக்க உதவுகிறது. காலையில் நீங்கள் ஓட்ஸ் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும் வரை பசி எடுக்காது. இதனால் நீங்கள் நொறுக்குத்தீனியை தானாகவே தவிர்த்துவிடுவீர்கள். இது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது. 

4. முளைக்கட்டிய பயிறு வகைகள்: 

முளைகட்டிய பயறு வகைகளை சாட் செய்து சாப்பிடுவது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் முளைத்த பயறுகளை உட்கொண்டால் உடலுக்கு நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. இதனால் எடையும் அதிகரிக்காது.

மேலும் படிக்க: மயிலிறகு சூடிய கண்ணன்... துளசியும் நாவல் பழமும் கிருஷ்ணருக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா?

5. முட்டை: 

முட்டை பலர் அதிகமாக விரும்பி உட்கொள்ளும் காலை உணவாக இருக்கின்றது. முட்டை பலருக்கு பிடித்த ஒரு தேர்வாக இருப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது தசைகளை உருவாக்க உதவுகிறது. முட்டை நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. நாள் முழுதும் நமக்கு தேவையான ஆற்றலையும் இது நமக்கு அளிக்கின்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow