திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி.. காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்?
காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் எட்டு மாதங்கள் கழித்து மாமன்ற கூட்டமானது நடைபெற இருந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு கூட்டத்தினை நடத்துங்கள் என மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கோவை, நெல்லை மேயர்கள் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்ட நிலையில், தற்போது காஞ்சி மேயர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






