Dogs Death Case in Tiruppur : நாய் வெறும் விலங்கு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. நம்மில் பலருக்கு அது வாழ்க்கை. அன்பாகவும், மென்மையாகவும் இருப்பதை தவிர, நாய்களை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தும் பல தனித்துவமான பண்புகள் உள்ளனர். ஆறறிவு உள்ள மனிதர்களுக்கு எழுதப்பட்டது நன்றி மறப்பது நன்றன்று குறள். ஆனால், ஐந்தறிவு உள்ள உயிரினங்களில் நன்றி மறவாத ஒரு உயிரினம் என்றால் அது நாய் மட்டும் தான். அன்பையும் தாண்டி தனக்கு பிஸ்கேட் அளித்த மனிதருக்கு காலம் முழுக்க தெரு நாய்க்கள் பாதுகாப்பாக இருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இப்படி மனிதர்களுடன் எந்த விலங்கும் கொண்டிராத உறவை கொண்டிருக்கிறது நாய்கள்.
ஆனால், மனிதர்கள் மீது தொடர்ந்து நடக்கும் கொலை மற்றும் பாலியல் வன்முறை சமபவங்கள் சில சமயம் நாய்கள் மீதும் நடைபெறுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அச்சத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதுபோன்ற ஒரு சம்பவத்தில் தான், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மூலனூர், கோவில் மேட்டு புதூர், முத்துசாமி கோவில் அருகில் இரண்டு நாய்களை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு அடித்து கொலை செய்ததாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட பிராணிகள் வகை தடுப்பு சங்கத்தினர் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில் கிட்டுசாமி என்பவரது வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய் ஒன்று என இரண்டு நாய்களை நடராஜ், பாலசுப்பிரமணி, பன்னீர், காந்திசாமி மற்றும் ஊர்மக்கள் இரண்டு நாய்களையும் அடித்து கொடுமைப்படுத்தி மரத்தில் தூக்கில் தொங்க விடுவது போல தொங்கவிட்டு அடித்துக் கொலை செய்துள்ளனர். நாய்களை துன்புறுத்தியது மட்டுமல்லாது அதை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர்.
மேலும் படிக்க: இன்று கிருஷ்ண ஜெயந்தி... மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
இதனை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர், அந்த கொடூரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் மூலனூர் காவல்துறையினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாயில்லா ஜீவன்களை அடித்து கொடுமைப்படுத்தி தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.