Chennai Metro Rail Service : இன்று கிருஷ்ண ஜெயந்தி... மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Chennai Metro Rail Service in Krishna Jayanthi 2024 : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை கால அட்டவணைப்படி இன்று (ஆகஸ்ட் 26) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Aug 26, 2024 - 06:47
Aug 26, 2024 - 17:11
 0
Chennai Metro Rail Service : இன்று கிருஷ்ண ஜெயந்தி... மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Chennai Metro Rail Service in Krishna Jayanthi 2024 : துவாபரா யுகம் தொடங்கும் முன்பாக பூமியில் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பூமியில் பாரம் தாங்க முடியாத பூமா தேவி இறைவன் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட தானும், ஆதிசேசனும் அவதரிப்போம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். துவாபரா யுகத்தில் ஆதிசேசன் பலராமனாகவும், மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும் அவதரித்தனர்.பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். இந்த ஆண்டு இன்று (ஆகஸ்ட் 26) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

பகவான் மகாவிஷ்ணு 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம். 10வது அவதாரம் கலியுகம் முற்றும் போது கல்கி அவதாரமாக எடுப்பார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப் பட்ட முக்கிய காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.  

அஷ்டமி திதியானது இன்று காலை 9:13 மணிக்கு தொடங்கி, நாளை (ஆகஸ்ட் 27) காலை 7:30 வரை உள்ளது. அதே சமயம் ரோகிணி நட்சத்திரமானது, இன்று இரவு மாலையில் தொடங்கி, நாளை  மாலை வரைக்கும் ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. அஷ்டமி திதியும் இணைந்து வரும் நேரம் இரவு நேரம் என்பதால், அது கிருஷ்ணன் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. மேலும், இன்று நள்ளிரவில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க: மயிலிறகு சூடிய கண்ணன்... துளசியும் நாவல் பழமும் கிருஷ்ணருக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா?

இந்நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை கால அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் நேர இடைவெளளிகளில் இயங்கும். அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும் காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow