வானில் பறந்த விமானம்.. வெடித்து சிதறி 62 பேர் உடல் கருகி உயிரிழப்பு..பிரேசிலில் சோகம்

பிரேசிலில் நாட்டில் சாவ் பாலோ மாநிலத்தில் 62 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளது.

Aug 10, 2024 - 07:21
Aug 10, 2024 - 07:23
 0
வானில் பறந்த விமானம்.. வெடித்து சிதறி 62 பேர் உடல் கருகி உயிரிழப்பு..பிரேசிலில் சோகம்
brazil plane crash


பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது  நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

இதனைதொடர்ந்து தீயணைப்புத்துறை விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டது. அதில் துரதிஷ்டவசமாக விமானத்தில் பயணித்த 58 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலில்படி விமானம் விபத்தால், வின்ஹெடோ பகுதி மக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விமானம் நிலைதடுமாறி சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெதர்லாந்தைச் சேர்ந்த பிஎன்ஓ நியூஸ் என்ற செய்தி நிறுவனம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது. பின்னர் வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது. பின்னர் விமானத்தில் இருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவதாக உள்ளது. 

பிஎன்ஓ நியூஸ் வெளியிட்ட செய்திகளின் படி, 62 பேர் சென்ற வியோபாஸ் 2283 என்ற விமானம் செங்குத்தாக கீழே விழுந்து வெடித்து சிதறி உள்ளது. தீப்பிழம்பாக அந்த இடமே மாறி உள்ளது. யாரும் உயிருடன் பிழைக்கவில்லை. ஏனெனில் விமானம் வந்து விழுந்த வேகத்தில் வெடித்து சிதறியது. அதில் ஏற்பட்ட தீப்பிழம்பு காண்போரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்து சம்பவத்தை மிகப்பெரிய துயரம் என பிரேசில் அதிபர் லூயிஸ் குறிப்பிட்டுள்ளதுடன், இறந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும்படியும் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow