Andhagan BoxOffice Collection: அந்தகன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்... கம்பேக் கொடுத்த பிரசாந்த்
டாப் ஸ்டார் பிராசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படத்தின் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்காக அந்தகன் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பல தடைகளை கடந்து வெளியான அந்தகன், பிரசாந்துக்கு சூப்பரான கம்பேக் என்றே சொல்லலாம். இந்த வாரம் வெளியான மற்ற படங்களை விடவும் அந்தகன் மட்டுமே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இதனால் நேற்றைய இரவு காட்சிகளுக்கான டிக்கெட் புக்கிங், எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 90களில் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்த பிரசாந்த், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் ஃபீல்ட் அவுட் ஆகியிருந்தார். இந்த நிலையில் தான் விஜய்யின் கோட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டானார். இதனையடுத்தே அந்தகன் படத்தை அவசர அவசரமாக படக்குழு ரிலீஸ் செய்தது.
அதற்கான பலனாக அந்தகன் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் தரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இத்திரைப்படம் முதல் நாளில் 1 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தி ரைட்ஸ் உட்பட 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்தகன், முதல் நாளில் ஒரு கோடி வசூல் செய்துள்ளது படக்குழுவுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க - பிரசாந்தின் அந்தகன் டிவிட்டர் விமர்சனம்
அந்தாதூன் ஒரிஜினலை அப்படியே ரீமேக் செய்து அந்தகன் வெளியாகியிருந்தாலும், நடிகர்கள் தேர்வும், பின்னணி இசையும் படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். பிரசாந்த் மட்டுமின்றி சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் மாஸ் காட்டியுள்ளதோடு, காமெடியிலும் கலக்கியுள்ளனர் என தெரிவித்திருந்தனர். முக்கியமாக பிரசாந்தின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தகனை தொடர்ந்து கோட் படமும் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ளதால், டாப் ஸ்டார் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், விஜய் சேதுபதி வரிசையில் பிரசாந்தும் தனது 50வது படத்தை ஹிட் கொடுத்து அசத்தியுள்ளார். அதாவது விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், தனுஷின் ராயனும் அவருக்கு 50வது படமாக ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தன. மகாராஜா, ராயன் படங்கள் அளவுக்கு அந்தகனின் வசூல் இருக்காது என்றாலும், பிரசாந்த் தனது 50வது படத்தை ஹிட்டாகியுள்ளதாக ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?