Andhagan Review: கம்பேக் கொடுத்தாரா டாப் ஸ்டார் பிரசாந்த்... அந்தகன் டிவிட்டர் விமர்சனம்!

டாப் ஸ்டார் பிராசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அந்தாதூன் படத்தின் ரீமேக்காக வெளியாகியுள்ள அந்தகன் எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

Aug 9, 2024 - 15:23
 0
Andhagan Review: கம்பேக் கொடுத்தாரா டாப் ஸ்டார் பிரசாந்த்... அந்தகன் டிவிட்டர் விமர்சனம்!
Andhagan Review

சென்னை: 90களில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்த டாப் ஸ்டார் பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதேநேரம் அவர் நடித்த அந்தகன் திரைப்படம் ரிலீஸாக முடியாமல் கிடப்பில் இருந்தது. இந்நிலையில், பிரசாந்த் தற்போது விஜய்யின் கோட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளதால், இதுதான் சரியான நேரம் என அந்தகன் படத்தையும் ரிலீஸ் செய்துவிட்டது படக்குழு. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி ஆகியோரும் பிரசாந்துடன் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வெளியான அந்தகன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் பற்றி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ரசிகர்கள், அந்தகன் சிறந்த ரீமேக் படமாக உருவாகியுள்ளது. நடிகர்கள் தேர்வும், பின்னணி இசையும் சூப்பர், இந்தி ஒரிஜினல் வெர்ஷன் பார்க்காதவர்களுக்கு அந்தகன் கண்டிப்பாக பிடிக்கும் என கூறியுள்ளனர். அதேபோல், அந்தகன் படம் மூலம் பிரசாந்த் கம்பேக் கொடுத்துள்ளார். பிரசாந்த் மட்டுமின்றி சிம்ரன், பிரியா ஆனந்த் மூவரும் நடிப்பில் மாஸ் காட்டியுள்ளனர். இந்தி வெர்ஷன் பார்த்திருந்தாலும், அந்தகன் படத்தை பார்க்கலாம். த்ரில்லர் ப்ளஸ் காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதன் நடுவே, 90ஸ் கிட்ஸ் பிரசாந்த் ரசிகர்கள் அந்தகன் படம் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிப்பதாகவும் மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகின்றனர். அவினாஸ் ராமச்சந்திரன் என்பவர், அந்தகன் படத்தில் பிரசாந்த் தான் வின்னர். இந்தியில் வெளியான அந்தாதூன் படத்துக்கு நெருக்கமாகவும், அந்த உண்மைத்தன்மை சிதையாமல் அந்தகன் படத்தை இயக்கியுள்ளார் தியாகராஜன். இப்படத்தின் நடிகர்கள் தேர்வும் சூப்பராக வந்துள்ளதாக பாராட்டியுள்ளார். 

அதேபோல், அந்தகன் படத்தின் முதல் பாதி செம காமெடி எனவும், பிரசாந்த், சிம்ரன், சமுத்திரகனி மூவரும் காமெடியில் கலக்கியிருப்பதாகவும் நெட்டிசன் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் அந்தகன் நல்ல பாராட்டுக்குரிய மேக்கிங், பிரசாந்தின் நடிப்பு தான் இப்படத்திற்கு ப்ளஸ் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ரீமேக் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக அந்தகன் வெளியாகியுள்ளது. சிம்ரன் உட்பட நடிகர்களின் செலக்ஷன் பக்கா, பிரசாந்த் & டீம் அந்தாதூன் ஒரிஜினலில் இருந்து எது வேண்டும், எது வேண்டாம் என்பதில் தெளிவாக முடிவு எடுத்துள்ளனர். ரீமேக்காக இருந்தாலும் மேக்கிங் புத்துணர்ச்சியாக உள்ளது என விமர்சித்துள்ளனர்.

மேலும் படிக்க - மகேஷ்பாபு சொத்து மதிப்பு எத்தனை கோடின்னு தெரியுமா?

ஒட்டுமொத்தமாக அந்தகன் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. டாப் ஸ்டார் பிரசாந்துக்கு அந்தகன் கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் எனவும், இதனால் விஜய்யுடன் நடிக்கும் கோட் படத்திலும் அவரது காட்சிகளுக்கு விசில் பறக்கும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த வாரம் வெளியான படங்களில் அந்தகன் மட்டுமே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow