என்னோட பில்லர் அம்மாதான்.. இப்போ என் தோழியும் அவங்கதான் - சைந்தவி நெகிழ்ச்சி

Singer Saindhavi Quotes : என்னோட பெரிய பில்லர், என் BACK BONE என் அம்மா தான். சின்ன வயசுல அம்மாவா வழி நடத்துனாங்க. இப்போ எனக்கு பிரெண்டு போல இருக்காங்க என்று கூறியுள்ளார் பாடகி சைந்தவி.

Jul 19, 2024 - 17:18
Jul 20, 2024 - 10:23
 0
என்னோட பில்லர் அம்மாதான்.. இப்போ என் தோழியும் அவங்கதான் - சைந்தவி நெகிழ்ச்சி
Singer Saindhavi Quotes

Singer Saindhavi Quotes : என்னோட நல்லது கெட்டதுனு எல்லாத்துலயும் என்கூட இருக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. நான் ஒருத்தர் பேர் மட்டும் சொன்னா சரியா இருக்காது. என்னோட பெரிய பில்லர், என் BACK BONE என் அம்மா தான். சின்ன வயசுல அம்மாவா வழி நடத்துனாங்க. இப்போ எனக்கு பிரெண்டு போல இருக்காங்க என்று கூறியுள்ளார் பாடகி சைந்தவி. ஜீ சரிகமப சீனியர்ஸ் சீசன் 4ன் ஜட்ஜ் ஆக அமர்ந்து பாடகர்களை உற்சாகப்படுத்தும் சைந்தவி குமுதம் சிநேகிதிக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ.


ஜீ சரிகமப சீனியர்ஸ் சீசன் 4 செட்ல Folk Round சூட்ல இருக்கோம். அதனால நாங்களும் செம HAPPYஆ., ஜாலியா இருக்குறோம். போனா வாரம் வந்துருந்திங்கனா எல்லாரும் அழுதுட்டு இருந்தோம்., இந்த வாரம் கரெக்ட்டா வந்திருக்கீங்க., WE ENJOYED சரிகமப என்று உற்சாகமாக வரவேற்றவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

சரிகமப-ல எல்லாரும் நல்லா PERFORM பண்ணுறாங்க., உங்களோட FAVOURITE CONTENTSTANT யாரு.?

FAVOURITEனு எப்படி சொல்ல முடியும். எனக்கு எல்லாரோட PERFORMம் புடிக்கும். இந்த BATCHல நிறைய TALENTANTS இருக்காங்க. பசங்க எல்லாரும் பயங்கர ஒற்றுமையா இருப்பாங்க. அவங்க பாடும் போது பயங்கரமா பாடுவாங்க. யாராவது ஒருத்தர் ஸ்டேஜ்ல பாடுன அப்படி ENCOURAGE பண்ணுவாங்க. பாடுறவங்க பாட்டு லைன விட்டுட்டா பாடுறவருக்கு முகம் மாறிடும், ஆனா டக்குனு எல்லாரும் எழுந்து நின்னு பாடுறவருக்கு CHEERS பண்ணுவாங்க. ஏனா., பாடுறவரு DOWNஆ பீல் பண்ணக்கூடாதுனு நினைப்பாங்க. எல்லாரும் COPETETIONக்குள்ள இருந்தாலும், அவங்களுக்குள்ள் அழகான RELATIONSHIP இருக்கு.

உங்களோட CO-JUDGES பற்றி சொல்லுங்க.?

CO-JUDGES எல்லாரும் என்னோட சீனியர்ஸ். எல்லாரும் அவ்ளோ வருசம் பாடிருக்காங்க. இருக்குறதுலயே நான் தான் ரொம்ப சின்னவ. எல்லாரும் என்ன அப்படி பாத்துப்பாங்க. சின்னப்பொண்ணு தான நாம சொல்லுறத அவ கேட்பா அப்படினு நினைக்காம. என்கிட்டயும் கருத்து கேட்பாங்க. அவங்க சொல்ற கமெண்ட்ஸ்க்கும், நான் சொல்ற கமெண்ட்ஸ்க்கும் DIFFERENT இருந்தாக் கூட அத வரவேற்பாங்க. சீனியர்ஸா இருந்தாலும் ரொம்ப COMFORTABLEஆ இருப்பாங்க., நாங்க எல்லாரும் சேர்ந்து தான் சாப்புடுவோம். இது எங்க எல்லாருக்கும் FAMILY REUNION மாதிரி., ஜீ சரிகமப சூட் எப்போடா நடக்கும்னு வாரா வாரம் எதிர்பாத்துட்டு இருப்போம்.

அர்ச்சனா கூட உங்களோட நட்பு பற்றி சொல்லுங்க.?

அர்ச்சனா பத்தி ஒரு வார்த்தைல சொல்லணும்னா UNCONDITIONAL LOVE. அவங்க யோசிக்கவே மாட்டாங்க., யாருக்கு என்னனாலும் முதல் ஆளா அவங்க தான் வந்து நிப்பாங்க. வார்த்தையா மட்டும் இல்லாம, செஞ்சும் காட்டுவாங்க. ஒரு ANCHORஆ இருந்து மொத்த ஷோவையும் சூப்பரா கொண்டு போறாங்க. அச்சுமானால எங்களுக்கு ஒரு நாள் கூட லேட் ஆனது இல்ல., SHE’S FABULOUS. MULTI TALENTANT, டான்ஸ் ஆடுனாலும் சூப்பரா ஆடுவாங்க. நல்லா பாடுவாங்க.

ஒவ்வொருத்தர் லைஃப்லயும் சிநேகிதிங்ற இடத்த ஒருத்தர் பிடிப்பாங்க. சைந்தவியோட சிநேகிதி யாரு.?

அம்மா. என்னோட நல்லது கெட்டதுனு எல்லாத்துலயும் என்கூட இருக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. நான் ஒருத்தர் பேர் மட்டும் சொன்னா சரியா இருக்காது. என்னோட பெரிய பில்லர், என் BACK BONE என் அம்மா தான். சின்ன வயசுல அம்மாவா வழி நடத்துனாங்க. இப்போ எனக்கு பிரெண்டு போல இருக்காங்க. 

உங்களோட காஸ்ட்யூம்ஸ் நல்லா இருக்கு. உங்க பேவரைட் என்ன WESTERN OR TRADITIONAL.?

எனக்கு SAREE ரொம்ப புடிக்கும். ஆனா., இப்போ கொஞ்சம் EXPERIMENTம் பண்ணி பாக்கலாம்னு சில காஸ்ட்யூம்ஸ் போடுறேன். சரிகமபல நிறைய யூஸ் பண்ணுறேன், 

டான்ஸ்லாம் ஆடுறிங்க எப்படி.?

சின்ன  வயசுல டான்ஸ் ஆடிருக்கேன். PROFESSIONAL SINGER ஆன பிறகு அதெல்லாம் நிறுத்திட்டேன், இப்போ இருக்குற SITUATIONக்கு எல்லாமே கொஞ்சம் தேவைப்படுதுல., அதனால அந்த SKILLS எல்லாம் கொஞ்சம் தூசி தட்டி எடுத்துட்டு வந்து, வருதா இல்லையானு பாக்குறேன். I WANT LEARN LOT MORE ABOUT MY SELF, IN THIS JOURNEY.

சைந்தவியோட LIVE IN CONCERT SHOW நாங்க எப்போ பாக்கப் போறோம்.?

சைந்தவி LIVE IN CONCERT கூடிய விரைவில் நடக்கப்போகுது. அது எப்போனா ஆகஸ்ட் 17 லேடி ஆண்டாள் ஆடிட்டோரியம்ல MADE VIBE FEST அப்படினு ஒரு மியூசிக் பெஸ்டிவல் நடக்குது. ஏற்கனவே சீசன் 1 முடிஞ்சுருக்கு., இது சீசன் 2. இந்த பெஸ்டிவல்ல முதல் முறையா சைந்தவி LIVE IN CONCERT LAUNCH பண்ணுறாங்க. இது கூட என்னோட இன்னொரு BANDம் PERFORM பண்ணப்போறாங்க. சைந்தவி LIVE IN CONCERT, FUTURING DK COLLECTIVE அதுக்கு அப்புறம் MAKKA BANDம் PERFORM பண்ணப்போறாங்க. எல்லாரும் ஷோக்கு வாங்க., சப்போர்ட் பண்ணுங்க. எங்கள மாதிரி ஆர்டிஸ்ட்க்கு முக்கியமே உங்களோட சப்போர்ட் தான்.

BEST CONFIDENT QUOTE FROM SAINDHAVI அப்படினா சிநேகிதி வாசகர்களுக்கு நீங்க என்ன சொல்வீங்க.?

உங்க CONFIDENT ரொம்ப முக்கியம். அது எப்போ வரும்னா, நீங்க INDEPENDENTஆ இருக்கும்போது., EMOTIONAL, FINANCIAL ஆ இருக்கும் போது தானாவே உங்களுக்கு SELF RESPECT வரும். வாழ்க்கைல உங்களால இன்னும் நிறைய FACE பண்ண முடியும்னு தோணும். SO BE CONFIDENT ALWAYS.

 விஜயலட்சுமி பழனிச்சாமி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow