Director Radha Mohan : அபியும் நானும் உருவாக காரணமான அந்த காதுகுத்து; இயக்குனர் ராதாமோகன் சொல்லும் ரகசியம்
Director Radha Mohan Interview : இயக்குனர் ராதாமோகன் இயக்க, யோகிபாபு, வாணிபோஜன் நடித்த சட்னிசாம்பார் வெப் சீரியஸ் வெற்றி பெற்றுள்ளது. அது குறித்தும் தனது படங்கள் குறித்தும், அபியும் நானும் பார்ட் 2 வருமா என்றும் அவர் விரிவாக பேசியுள்ளார்
Director Radha Mohan Interview : அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி போன்ற தரமான படங்களை இயக்கிய ராதாமோகனின் அடுத்த படைப்பு சட்னி சாம்பார். இது சினிமா அல்ல. சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற வெப்சீரியஸ். யோகி பாபு, வாணிபோஜன், நிழல்கள் ரவி, சந்திரன், மைனா நந்தினி உட்பட பலர் நடித்துள்ளனர்.
சட்னி சாம்பார் உருவான கதை எப்படி என்று ராதாமோகனிடம் கேட்டால், ‘‘சென்னையில் ஒரு ஓட்டலில் சாம்பார் பேமஸ். அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது எந்த ஓட்டலில் சட்னி நல்லா இருக்கும். இரண்டையும் இணைத்தால் எப்படி இருக்கும் என்று காமெடியாக யோசித்தேன். சட்னி சாம்பார் கரு உருவானது’’ என்று சிரிக்கிறார். அவர் அளித்த நேர்காணல்:
கே:சினிமாவுக்கு வந்த 20 ஆண்டுகளில் நீங்க இயக்கிய முதல் வெப்சீரியஸ் இது. பொதுவாக ஓடிடியில் வெளியாகும் கதைகளில் ஆபாசம், வன்முறை அதிகமாக இருக்குமே?
எனக்கு அந்த டவுட் இருந்தது. என் பாணி செட்டாகுமா என்று யோசித்தேன். ஆனால், சட்னிசாம்பார் வெளியானதில் இருந்து இன்றுவரை எனக்கு அவ்வளவு போன், ரெஸ்பான்ஸ். அதில் பலரும் ‘‘நாங்க குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்த்தோம். அதுக்கு உங்களுக்கு நன்றி’ என்றார்கள். இந்தவகை கதைகளுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
கே : யோகிபாபுவுக்கும் முதல் வெ ப்சீரியஸ். அவர் கால்ஷீட் வாங்கவே கஷ்டமாச்சே?
உண்மைதான், என்னது யோகிபாபுவை வெச்சு வெப்சீரியலானு பலரும் கேட்டார்கள். அவ்வளவு பிசியிலும் பத்து, பத்துநாள் பிரித்து கால்ஷீட் கொடுத்தார். என்னது, உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட்டானு பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ஒருவழியாக பக்காக பிளான் செய்து ஊட்டியில் அதிக படப்பிடிப்பு நடத்தினோம். அவரால் புரமோஷனுக்கு கூட வர முடியவில்லை. வெ ளி மாநிலத்தில் இருந்தார். அவர் நடித்த முதல் வெப்சீரியஸ் வெ ற்றி என்பது மகிழ்ச்சியே
கே : உங்க படங்கள் அனைத்தும் மெ ன்மையாக இருக்குதே
என் பாணி அப்படி. என்னை பாதிக்கும் விஷயத்தை, நான் ரசிப்பதை படமாக்குகிறேன். அந்தவகையி்ல் என்னுடைய பல படங்கள் சாப்ட். ஆனாலும், பிருத்தாவனம், பொம்மை, பயணம் மாதிரி மாறுபட்ட படங்களையும் கொடுத்து இருக்கிறேன். எனக்கு இயல்பாக வருவதை பண்ணுறேன்.பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் பற்றி யோசிக்கவில்லை. அதற்கு பொறுப்பும் அதிகம்.
கே : உங்க படங்களில் காமெடி பேசப்படும். எம்.எஸ்.பாஸ்கரை சினிமாவில் பிரபலப்படுத்தியது நீங்கதானே?
அழகிய தீயே, மொழி படங்களில் அவருக்கு மாறுபட்ட, காமெடி கேரக்டர். டிவியில் இருந்து வந்தவருக்கு அந்த படங்கள் இன்னொரு பாதையை ஏற்படுத்திக்கொடுத்தன. அவர் திறமைசாலியான நடிகர். இப்போது குணசித்திர நடிகராகவும் கலக்குகிறார். காமெடியை விருப்பாதவர்கள் இருக்க முடியாதே
கே : ஆயிரம்தான் சொல்லுங்க அபியும்நானும் மாதிரி ஒரு படம் வராதே
அதே ஏன் கே ட்குறீங்க. அந்த படம் வெ ளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், அந்த படம் பற்றி, கதை, சீன்கள் பற்றி இன்னமும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் கூட சட்னிசாம்பார் குழுவுடன் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, ஒரு கார் டிரைவர் பின்னால் வந்தார். திடீரென அழுதுவிட்டு, என் குடும்பம் நல்லா இருக்க,நீங்கதான் காரணம். மனைவியுடன் சண்டை போட்டு பிரிந்து இருந்தேன். குழந்தை இருந்தது நிறைய ஈகோ பிரச்னை. அபியும்நானும் படம் பார்த்தேன். மனைவியுடன் பேசினேன், பிரச்னைகள் ஓய்ந்தது. இப்ப குழந்தை, குடும்பம் என நல்லா இருக்கிறேன்’ என்றார். ஒரு சினிமா இப்படி பல இடங்களில், பலரிடம் மாற்றத்தை கொண்டு வந்தது மகிழ்ச்சி
கே : அபியும் நானும் பார்ட் 2 வருமா?
இந்த கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு தலைப்பை, நடிகர், நடிகைகளின் வைத்துக்கொண்டு எனக்கு 2வது பார்ட் பண்ணுவதில் விருப்பம் இல்லை. கதை கிடைத்தால் கண்டிப்பாக நடக்கும்.
கே : நீங்க பிரகாஷ்ராஜ் டீம் ஆச்சே?
பல ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்கிறது. சினிமாவுக்காக எதையும் செய்வார். அவர் அணியில் நான் உட்பட பல நண்பர்கள் தொடர்ச்சியாக பயணிக்கிறோம்.இப்போது சினிமா தவிர, சமூக விஷயங்களில், அரசியலில் ஆர்வமாக இருக்கிறார். அதையும் விவாதிக்கிறோம், பேசுகிறோம்
கே:மீண்டும் அபியும்நானும்(Abhiyum Naanum) படத்துக்கு வருவோம். அந்த பட சீன்கள் மட்டுமல்ல, டயலாக்குகள் கூட இன்றும் பிரபலம். குறிப்பாக, பிரகாஷ்ராஜ் பேசுகிற அந்த அலெக்சாண்டரின் குதிரை டயலாக் ?
நான் பேங்க் பரீட்டை எழுதியபோது அலெக்சாண்டரின் குதிரை பெயரை கே ட்டு இருந்தார்கள். எனக்கு தெரியலை. பஞ்சகல்யாணி என்று எழுதியதாக நினைவு. பின்னர் அந்த குதிரை பற்றி விசாரித்தபோது, பியூசிபெலஸ் என்பது குதிரையி்ன பெயர் . அதை அலெக்ஸாண்டர் எவ்வளவு பாசமாக வளர்ந்தார். அந்த குதிரை பெயரில் ஒரு நகரத்தையே கட்டினார் என்று தெ ரிந்துகொண்டேன். அந்த குதிரை பெயர் மட்டுமல்ல, இன்றைக்கும் பல பள்ளிகளில் எல்கேஜியில் குழந்தைகளுக்கு சேர்க்க, பெ ற்றோர்களுக்கு பரீட்சைவைக்கிறார்களே. அதுவும் பேசப்படுகிறது.
கே : கடைசியாக, அபியும் நானும் கதைக்கரு எப்படி உருவானது
ஒரு பாசக்கார தந்தை, தனது மகளுக்கு காது குத்தும்போது ஓவென கதறி அழுததை பார்த்தேன். இப்படியெல்லாம் அப்பா இருக்கிறார்களா என்று யோசித்தேன், விசாரித்தேன். மகள் மீது உயிரை வைத்து இருக்கும் பல அப்பாக்கள், பல விஷயங்களை அறிந்துகொண்டேன். அபியும் நானும் உருவானது. அடுத்து திரிஷா காம்பினேசனில் படம் பண்ண இருந்தது. சில காரணங்களால் நடிக்கவில்லை.விமான கடத்தல் குறித்த பயணம் கூட, என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதுதான். என் படங்களின் டயலாக், சீன், இன்றைக்கு பல இடங்களில் மீம்ஸ் ஆக வருவது மகிழ்ச்சி.’’ என்று முடிக்கிறார் ராதாமோகன்
***
What's Your Reaction?