Chennai : 16 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்.. கடனுக்காக செய்த கொடூரம்..

Mother Forced Daughter to Sex Work for Loan in Chennai : சென்னை வியாசர்பாடியில் வாங்கிய கடனுக்காக 16 வயது மகளை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திய தாய் உட்பட ஆறு பேரை எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

Aug 5, 2024 - 22:07
Aug 6, 2024 - 15:38
 0
Chennai : 16 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்.. கடனுக்காக செய்த கொடூரம்..
கடனுக்காக 16 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்

Mother Forced Daughter to Sex Work for Loan in Chennai : வியாசர்பாடி சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி அளிக்க முடியாத காரணத்தினால், கடன் கொடுத்த முத்துலட்சுமியுடன் சேர்ந்து தனது 16 வயது மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக தொடர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளனர். இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட மகள், அவர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். பிறகு, சில நாட்கள் கழித்து, மீண்டும் தாயுடன் சேர்ந்து இருக்க சென்றபோது, மறுபடியும் பாலியல் தொழிலில் ஈடுபட தாய் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், 16 வயது சிறுமி மணலி புதுநகர் பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் தாய் தொடர்பு கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வற்புறுத்தியதாக மகள் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 16 வயது மகள் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகாரினை அடுத்து, 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திய விவகாரத்தில், சிறுமியின் தாய் மற்றும் கடன் கொடுத்த முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் நிஷாந்த் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி ஸ்பீடு அஜித், பட்டதாரிகளான கிஷோர், மகேஸ்வரன் ஆகியோர் தொடர்பு இருப்பதை கண்டறிந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, சிறுமியின் தாய் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow