அமரன் போன்ற படத்தில் நடித்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
அமரன் திரைப்படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி , இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் பேசிய படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “முகுந்த் வரதராஜன் எப்போதும் தன்னை ஒரு இந்தியனாக மட்டுமே அடையாளம் காண்பிக்க நினைத்தார் என அவரின் தாய் தந்தை கூறினார்கள். முகுந்த் வரதராஜன் சார் குடும்பத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அணிக்கும், மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த படத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உண்மையில் நெகிழ்ச்சியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்துக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி.வரதராஜன் மனைவி எனக்கு ஒரு கோரிக்கை வைத்தார். வரதராஜன் ஒரு தமிழன், அதனால் ஒரு தமிழனை படத்தின் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய நடிகை சாய் பல்லவி, எனக்கு படம் வெளியானதுக்கு பிறகு மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம். ரொம்ப ரேராக தான் இந்த மாதிரி ஒரு படம் நம்மால் பண்ண முடியும். ராணுவத்தில் பணிபுரியவர்கள் எங்கள் வாழ்க்கை தொடர்பாக ஒரு படம் வந்துள்ளது என்று நினைத்து உண்மையில் ரொம்ப சந்தோஷப்படுவார்கள். இது போன்ற ஒரு படத்தில் நடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதுவும் இந்து கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு இயக்குனர் ராஜ்குமாருக்கு நன்றி என தெரிவித்தார்.