Vettaiyan Kanguva Clash : பின்வாங்கப்போவது ரஜினியா? சூர்யாவா? வேட்டையன், கங்குவா மோதல் முற்றுகிறது
Vettaiyan Kanguva Clash : ஆயுதபூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 10ம் தேதி, ரஜினி நடித்த வேட்டையன், சூர்யா நடித்த கங்குவா படங்கள் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேர த்தில் 2 ரிய படங்கள் ரிலீஸ் ஆவதா? இது, நல்லதல்ல என்று திரைத்துறையில் குரல்கள் கேட்கிற நிலையில், இரண்டுபேரில் யார் பின்வாங்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Vettaiyan Kanguva Clash : பொதுவாக, தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, புத்தாண்டு, அரசு விடுமுறை போன்ற விசேஷ நாட்களில் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுடன், சின்ன பட்ஜெட் படங்கள், புதுமுகங்கள் நடித்த படங்களும் வெளியாவது வழக்கம். சில சமயம் நாலைந்து படங்கள் கூட ஒரே நாளில் வெளியாகி, ரசிகர்களுக்கு செம விருந்து கொடுத்து இருக்கின்றன. ஆனால், சமீபகாலமாக வசூல், தியேட்டர் பிரச்னை, தொழில் போட்டி காரணமாக முன்னணி ஹீரோ நடித்த படங்கள் ஒரே நாளில் மோதுவது தவிர்க்கப்படுகிறது. ஒரு பெரிய ஹீரோ படம் வந்தால், அதற்கு முன்னதாக அல்லது சில வாரங்கள் கழித்து இன்னொரு ஹீரோ படம் வருகிறது. சில சமயங்களில் மட்டும் சூழ்நிலை காரணமாக ஒரு சில பெரிய படங்கள், அதுவும் அரிதாக மோதியிருக்கின்றன.
யானை மாதிரி ரஜினி
மாதிரி ரஜினிகுறிப்பாக, ரஜினி படம் வெளியாகிறது என்றால், ரஜினி இமேஜ், வியாபாரம், ரசிகர்கள் பலம் காரணமாக, மற்ற ஹீரோக்கள் தாங்களாகவே போட்டியை தவிர்த்து விடுகிறார்கள் யானை, சிங்கத்தை பார்த்து மிரள்வது போல, மற்ற படங்கள் பொட்டி பாம்பாக அடங்கிவிடுகின்றன. 74வயதை தொடும் ரஜினிக்கு இன்னமும் அந்த பவர் இருக்கிறது. சரி விஷயத்துக்கு வருவோம். வரும் அக்டோபர் 10ம் தேதி, வியாழக்கிழமை ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு லைகா தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படமும் மோதுகின்றன. இதுதான் கோலிவுட்டில் இப்போதைக்கு ஹாட் டாபிக்.ரஜினியுடன் மோத சூர்யா எப்படி சம்மதித்தார்? இப்படி இரண்டு பெரிய படங்கள் மோத காரணம் ஈகோவா? சூழ்நிலையா? வேறு காரணமா? இந்த போட்டி ஏன் என்று கோலிவுட்டில் விசாரித்தால் பல தகவல்கள் கிடைக்கின்றன.
4 நாள் வசூல்
இரண்டுபடங்களும் சூழ்நிலை, பிஸினஸ், நெருக்கடி காரணமாகவே அக்டோபர் 10ம் தேதியை தேர்ந்தெடுத்துள்ளன . இந்த தேதியை விட்டால், இன்னொரு முறை இப்படிப்பட்ட வாய்ப்பு அரிது. காரணம், அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்தால், ஆயுத பூஜை விடுமுறை காரணமாக, 4 நாட்கள் வசூலை மொத்தமாக அள்ளலாம் என்று இரண்டு தரப்பும் கணக்குபோடுகின்றன. இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் இந்த தேதியை விட மறுப்பதாக பேசப்படுகிறது. அக்டோபர் 10ம் தேதியை விட்டு, தீபாவளிக்கு வரலாம் என்று இவர்கள் நினைத்தால் தீபாவளிக்கு கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன், ஜெயம்ரவி நடிக்கும் பிரதர், துல்கர்சல்மான் நடித்த லக்கிபாஸ்கர் என 3 படங்கள் வருகின்றன. தெ லுங்கு, இந்தியிலும் மற்ற படங்கள் ரிலீஸ் ஆவதால், அக்டோபர் 10 என்பதே சிறந்த தேதி என நினைக்கிறார்கள்.
170வது படம்
இந்த போட்டி குறித்து ரஜினி தரப்போ, ‘‘இது ரஜினியின் 170 படம். வேட்டையன் சொல்லி அடிக்கும். ரஜினி வேட்டையனாக நடித்த சந்திரமுகி பெரிய வெற்றி பெற்றது. அந்த சாதனையை இந்த படமும் படைக்கும். அந்த காலத்தில் சிவகுமார் படங்களுடன், ரஜினி படங்கள் மோதின. இப்போது அவர் மகன் சூர்யா நடிக்கும் படத்துடன், ரஜினி ஹீரோவாக நடிக்கம் படம் மோதுகிறது. இது, எவ்வளவு பெரிய விஷயம். ரஜினி படம் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை’’ என்கிறது.
2 ஆண்டு இடைவெளிக்குபின்
ஆனால், சூர்யா தரப்போ ‘‘நாங்கள்தான் முதலில் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தோம். ஜூன் மாத இறுதியில் கங்குவா உலகம் முழுக்க பல மொழிகளில் ரிலீஸ் என அறிவித்துவிட்டோம். ஆனால், வேட்டையன் தரப்போ, ஆகஸ்ட் 19ம் தேதி பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்த படம், வேட்டையனை விட பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. அனிமல் படத்தின் மூலம் இந்தி திரையுலகை மட்டுமல்ல, இந்திய திரையுலகை அதிர வைத்த பாபிதியோல் வில்லனாக மாறுபட்ட வேடத்தில் வருகிறார். திஷாபதானி ஹீரோயின்.லேட்டஸ்ட்டாக, படத்தில் கார்த்தியும் இணைந்துள்ளார். அண்ணன் சூர்யாவும், தம்பி கார்த்தியும் இணைந்து நடித்த முதல் படம். ஏற்கனவே, தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் சூர்யாவுக்கு, கார்த்திக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. பாபிதியோல் காரணமாக, இந்தியிலும் படத்தின் பிஸினஸ், எதற்கும்துணிந்தவன் படத்துக்கு சூர்யா நடிப்பில், 2 ஆண்டு இடைவெளிக்கு வரும் படம். சூர்யா ஏகப்பட்ட கெட்டப்பில் வருகிறார். 10க்கும் அதிகமான மொழிகளில் படம் டப்பாகிறது. சூர்யா நடித்த 42வது படமான கங்குவா வெ ற்றி பெறுவது நிச்சயம்’’ என்கிறார்கள்.
என்ன பிரச்னை
சரி, அக்டோபர் 10ம் தேதி 2 படங்கள் வந்தால் பிரச்னையா என்றால், அந்த காலத்தில் விடுமுறை நாட்களில் நாலைந்து படங்கள் வந்து இருக்கிறது. இப்ப, 2 படங்கள் மோதுவதால் என்ன பிரச்னை என்று விசாரித்தால், அந்த காலம் வேறு, இந்த காலம் வேறு. தமிழகத்தில ஆயிரம் ஸ்கிரீன் இருக்கிறது. இதில் எந்த படத்துக்கு அதிக ஸ்கிரீன் ஒதுக்குவது, யாருக்கு மல்டிபிளக்சில் பெரிய ஸ்கிரீனை ஒதுக்குவது, யாருக்கு எந்த ஷோம் கொடுப்பது என ஏகப்பட்ட பிரச்னை. முதல்நாள் வசூல் என்பது பெரிய படங்களுக்கு பெரிய வியாபார யுக்தி. அது ஈகோபிரச்னையும் கூட. கடந்த படத்தை விட, ஒரு ஹீரோவின் முதல் நாள் வசூல் குறைந்தால், அவர் மார்க்கெட் பாதிக்கப்படும். இப்படி இரண்டு பெரிய படங்கள் மோதினால் முதல்நாள் வசூல் பாதிக்கப்படும். ஒரு படம் மட்டும் வந்தால், அது சுமாராக இருந்தாலும் சில நாட்கள் அரங்கு நிறைந்து அல்லது வசூல் ரீதியாக திருப்தியாக ஓடும். ஆனால், இரண்டு பெரிய படங்கள் வந்தால், ஒரு படம் சுமார் என்றால் அது பாதிக்கப்படும். அந்த படத்தின் ஸ்கிரீன் எண்ணிக்கை கு றையும். வசூல் பாதிக்கப்படும், தயாரிப்பாளர், வினியோகஸ், தியேட்டர் அதிபர்கள் என பலருக்கும் சிக்கல், இந்த போட்டியை தவிர்க்க வேண்டும். ஏதாவது ஒரு படம் அக்டோபர் 10க்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர வேண்டும். அதுதான், இரண்டு பட நிறுவனம், இரண்டு ஹீரோக்களுக்கு, ஏன் தமிழ்சினிமாவுக்கே ஒருவகையில் நல்லது என்கிறார்கள். ஆனால், இரண்டு தரப்பும் சூழ்நிலை, தமிழகம் தவிர மற்ற மொழி வியாபாரம், அங்கே உள்ள தியேட்டர் எண்ணிக்கை, ஓடிடி கமிட்மென்ட், அதில் ரிலீஸ் தேதி, வேறு சில பிஸினஸ் விஷயங்கள் காரணமாக அக்டோபர் 10ல் ரிலீஸ் என்பதில் உறுதியாக இருப்பதால் குழப்பம் நீடிக்கிறது. ஆனாலும் யாராவது ஒருவர் பின்வாங்கினால் அது ஈகோ பிரச்னையை, ரசிகர்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
நல்ல படம் ஓடும்
இது மோதல் குறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டால், இந்த போட்டி நல்லது. இரண்டுபெரிய படங்கள் வந்தால் தியேட்டர்களில் கூட்டம் அதிகம் வரும். இப்படிப்பட்ட பெரிய படங்கள்தான் தியேட்டரை வாழ்விக்கின்றன. பல நாட்கள் அரங்கம் நிறையும்.எந்த படம் நல்லா இருக்கிறதோ, அந்த படத்துக்கு ரிலீஸ் ஆன சில நாட்களில் அதிக திட்டம் ஒதுக்கப்படும். ரஜினி, சூர்யா என்று பாகுபாடு இல்லை. இரண்டு படத்துக்கும் நல்ல ஓபனிங் கிடைக்கும். நல்ல வசூல் வரும்.’’ என்கிறார்
கட்டாயப்படுத்தக்கூடாது
இயக்குனர், எழுத்தாளர், சினிமா திறனாய்வாளரான கேபிள் சங்கரோ, ‘‘இது புதிதல்ல, எத்தனையோ முறை இப்படிபெரிய படங்கள் மோதி உள்ளன. ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் விஸ்வாசம் மோதியது. ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு நல்லது. அவர்கள் இரண்டு படங்களை அடுத்தடுத்து பார்க்கலாம்.4 நாட்கள் லீவில் ஒரு படத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்று எப்படி கட்டாயப்படுத்ததலாம். பெரிய பட்ஜெட் படங்கள் ஒரே நேர த்தில் வருவது சினிமாத்துறைக்கு நல்லது. இந்த படங்களின் வசூல்தான், இந்த நடிகர்களின் அடுத்த பட சம்பளத்தை, வியாபாரத்தை நிர்ணயம் செ ய்கின்றன. இரண்டு படங்கள் வந்து வசூல் குறைந்தால், அடுத்து இந்த நடிகர்கள் நடித்த படங்களின் பட்ஜெட் குறைய வாய்ப்பு. சம்பளம் அதிகரிக்காது. தனியாக ஓட்டிதான் பல ஹீரோக்களில் படங்கள் அதிக வசூலை காண்பித்தார்கள். சினிமாவில் போட்டியை தவி்ர்க்க முடியாது. அனைத்து தியேட்டர்களிலும் வேட்டையன் ஓடும் என்று சொல்ல முடியாது. எந்த படம் நல்லா இருக்குதோ, அந்த படத்துக்கு அடுத்த சில நாட்களில் தியேட்டர் எண்ணிக்கை அதிகரிக்கும்.’’ என்றார்
வெ ற்றி தேவை
ரஜினி நடித்த ஜெயிலர் பெரிய வெற்றி பெற்றாலும், அவர் கடைசியாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில்
நடித்த லால்சலாம் பெரிதாக போகவில்லை. அதனால், ரஜினிக்குவெற்றி தேவைப்படுகிறது. சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுவும் பெரிய ஹிட் இல்லை. சூர்யாவுக்கும் வெற்றி தேவைப்படுகிறது. சிவா இயக்கிய அண்ணாத்த சூப்பர் ஹிட் படமல்ல, அவருக்கும் ஒரு வெற்றி தேவை. த.செ.ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் பெரிய ஹிட் என்றாலும், அது தியேட்டரில் வெ ளியாகாமல் ஓடிடியில் வெளியானது. அவர் இயக்கிய கூட்டத்தில் ஒருவன் ஹிட் இல்லை.அவருக்கும் வெற்றி தேவை. இந்தியன் 2 படத்தின் வசூல், தங்கலான் படத்தின் வசூல் காரணமாக, லைகா, ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் ஒரு சூப்பர் ஹிட் கொடுத்து தங்களை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனால், இந்த இரண்டு படக்குழுவுக்கும் இந்த ரிலீஸ், இந்த வெ ற்றி முக்கியமானதாக இருக்கிறது
தவறான தகவல்
இதற்கிடையில், சூர்யாவின் கங்குவா பின்வாங்க வாய்ப்பு, நவம்பருக்கு அந்த படம் தள்ளிப்போகலாம் என்று செய்திகள் கசிய, இது தவறான தகவல். இதுவரை கங்குவா ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. அப்படி மாற்றம் வந்தால் நாங்களே அறிவிப்போம், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். என்று ஸ்டூடியோ கிரீன் தரப்பு அறிவிக்கிறது. லைகாவும் வேட்டையன் ரிலீஸ் விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. பின்வாங்கப்போவது ரஜினியா? சூர்யா? அல்லது இரண்டுபேரும் மோதப்போகிறார்களா? ஜெயிக்கப்போவது யார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.
What's Your Reaction?