லவ் யூ ரசிகர்களே... போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் கார்த்திகை தீபம் அர்த்திகா

Karthigai Deepam Serial Actress Arthika Interview : எவ்ளோ பெரிய பிரச்னை வந்தாலும், என்கூட எங்க அம்மா இருந்தாங்கன்னா அதையெல்லாம் சமாளிச்சு நான் மேல வந்துடுவேன். அம்மா என்கூட இல்லாத நாளை எப்பவும் நான் நினைச்சுப் பார்த்ததில்ல என்று கூறியுள்ளார் கேரளத்து ஏஞ்சல் அர்த்திகா

Jul 19, 2024 - 17:54
Jul 20, 2024 - 10:38
 0
லவ் யூ ரசிகர்களே... போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் கார்த்திகை தீபம் அர்த்திகா
karthigai deepam serial actress arthika

Karthigai Deepam Serial Actress Arthika Interview : கார்த்திகை செட்ல அவர் ரொம்ப சேட்டை பண்ணுவாரு. ரொம்பவே ஜாலியான கேரக்டர். நான் நடிச்சுட்டு இருந்தா, கேமரா பின்னாடி நின்னு ஏதாவது குறும்புப் பண்ணி, சிரிக்க வைச்சிடுவாரு என்று தனது சீரியல் அனுபவங்களை கூறியுள்ளார் கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகா.ஜீ தமிழில் 500 எபிசோடுகளை கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ‘கார்த்திகை தீபம்’ சீரியல். அதில், கதாநாயகி தீபாவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார், கேரளத்து ஏஞ்சல் அர்த்திகா. அவரிடம் பேசினோம்

முதல் நாள் நீங்க ஷூட்டிங் வரும்போது இருந்த மனநிலையும், இப்போ இருக்குற மனநிலையும் எப்படி இருக்கு?

‘‘இந்த சீரியல் ஆரம்பிச்சு இப்போ தான் ரெண்டு, மூணு மாசம் ஆன மாதிரி இருக்கு. அதுக்குள்ள ஒன்றரை வருஷம் ஆகிடுச்சானு ஆச்சர்யமா இருக்கு. ‘சீரியலுக்கு நாம புதுசு. என்ன கேரக்டர், நம்மள எப்படி ட்ரீட் பண்ணுவாங்க?’னு ஆரம்பத்துல எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, இப்போ நான் ரொம்பவே கான்ஃபிடென்ட்டா இருக்கேன். ‘இது நம்ம ஃபேமிலி’ங்கிற உணர்வோட எல்லாருமே உரிமையா பழகுறோம்.’’ 

ரியல் லைஃப்ல அர்த்திகா எப்படி? 

‘‘தீபா ரொம்ப பாவம். ஆனா, அர்த்திகா அப்படிக் கிடையாது. போல்டா இருக்க வேண்டிய இடத்துல போல்டா இருப்பேன். தீபாவ எல்லாருக்கும் புடிக்கும். நானும் எல்லார் கூடவும் ஃபிரெண்ட்லியா பழகுவேன். இதுதான் என் ரியல் லைஃப்க்கும் தீபாவுக்கும் இருக்குற ஒற்றுமைனு நினைக்குறேன்.’’

சீரியல் தீபாவோட அப்பா, அம்மா எப்படி? ரியல் லைஃப்ல அர்த்திகாவோட பெற்றோர் எப்படி?

‘‘தீபாவோட அப்பா, அம்மா ரொம்பவே பாசமானவங்க. ரியல் லைஃப் அர்த்திகாவோட அப்பா இறந்து, 15 வருஷமாச்சு. எல்லாமே எனக்கு அம்மாதான். எனக்கு ரெண்டு அக்கா, ஒரு தங்கச்சினு நாங்க மொத்தம் 4 பேரு. எங்களுக்கு அம்மா, அப்பானு எல்லாமுமா இருக்குறது எங்க அம்மாதான். 
நான் எப்போல்லாம் சோர்வா ஃபில் பண்றேனோ அப்பல்லாம், ‘உன்னால முடியும்’னு சொல்லி, எனக்கு சப்போர்ட்டா இருந்து, நம்பிக்கைக் கொடுப்பாங்க. ‘சிங்கிள் மதரா’ இருந்து பல பிரச்னைகளை ஃபேஸ் பண்ணி, என்னைய இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்காங்க. 

எவ்ளோ பெரிய பிரச்னை வந்தாலும், என்கூட எங்க அம்மா இருந்தாங்கன்னா அதையெல்லாம் சமாளிச்சு நான் மேல வந்துடுவேன். அம்மா என்கூட இல்லாத நாளை எப்பவும் நான் நினைச்சுப் பார்த்ததில்ல. அம்மான்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும்.’’ 

உங்களோட கேரியர், ஆக்டிங்தான்னு எப்போ தோணுச்சு? அதுக்கு ஃபேமிலியில எப்படி சப்போர்ட் பண்ணாங்க?


‘‘நான் ஒரு ஷாப்ல வேலை செஞ்சுட்டு இருந்தேன். அப்போதான் படம் நடிக்குற வாய்ப்பு எனக்கு வந்துச்சு. ‘சினிமா ஃபீல்டுக்கு போனா, பொண்ணுங்களுக்கு அட்ஜட்ஸ்மென்ட் பிரச்னை வரும்’னு சொல்வாங்க. அதுபோல நானும் என் வீட்ல சொன்னப்ப எல்லாரும் பயந்து, ‘வேண்டாம்’னு சொன்னாங்க. ‘எப்படி நடந்துக்கணும்னு எனக்குத் தெரியும்’னு அவங்களுக்கு உறுதி கொடுத்துட்டு, ஃபீல்டுக்கு வந்தேன். மத்தபடி, முன்னாடியே எனக்கு நடிப்புத் திறமை இருக்குனு நான் நம்பல. எல்லாமே இங்க வந்து கொஞ்ச கொஞ்சமா கத்துக்கிட்டதுதான். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மாவோட ஃபேமிலி ஆள்கள் ரெண்டு மூணு பேரையும் கூட்டிட்டுப் போவேன். அப்புறம்தான் வீட்ல எனக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.’’

மலையாளம், தமிழ்... இந்த ரெண்டு மொழியில எதுல நடிக்க உங்களுக்கு சுலபமா இருக்கு? 


‘‘மலையாளம் எனக்குத் தாய்மொழி. அதனால, பேசுறதுக்கு ஈஸியா இருக்கும். மத்தபடி, தமிழ்நாடுதான் எனக்கு எல்லாமே கொடுத்திருக்கு. தமிழ்நாட்டு மக்களும்  கேரளாவுலயும் எனக்கு ரொம்பவே சப்போர்ட் பண்றாங்க.’’

கருப்பு ஸ்கின் கலர்ல வரும்போது நிறைய விமர்சனங்கள், கேலிகளை எதிர்கொண்டிருப்பீங்களே?

‘‘முதல்ல கருப்பு கலர் மேக்கப்ல நான் வந்தப்போ, ‘தமிழ்நாட்ல இந்த மாதிரி கருப்பு கலர்ல நிறைய பொண்ணுங்க இருக்காங்க. எதுக்காக கேரளாவுலேருந்து ஒரு பொண்ண கூட்டிவந்து, கருப்பு கலர் மேக்அப் போட்டு நடிக்க வைக்கணும்?’னு கேட்டிருக்காங்க. எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும்னு சொல்ல முடியாதுல. எனக்குக் கிடைச்சது கடவுளோட புண்ணியம்னுதான் சொல்லுவேன். இப்போ கருப்பு மேக்அப்லாம் இல்ல. முதல்ல அதை மெயின்டெயின் பண்ணிட்டு இருந்தாங்க. ஏன்னா, சீரியல் பார்க்குற மக்கள் மனசுல தீபா ஒரு கருப்பு பொண்ணு. அதனாலதான் இவ்வளவு பிரச்னையை ஃபேஸ் பண்றானு தோணும். 
இப்போ நான் என்ன மாதிரி மேக்அப்ல வந்தாலும், ‘இவ கருப்பு பொண்ணுதான்’னு மனசுல ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. தவிர, இப்போ எபிஸோடு டெலிகாஸ்ட் ஸ்பீடுல மேக்அப்ல பக்காவா பண்ணிட்டுப் போய் நடிக்கிறது இல்ல.’’

ஹீரோ கார்த்திக் பற்றி சொல்லுங்க? செட்ல அவர் எப்படி இருப்பாரு?

‘‘நான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்ல நடிக்கிறதுக்கு முன்னாடி, அவர்கூட ‘பிளாக் ‘n’ வைட்’ அப்படின்னு ஒரு படம் பண்ணிருந்தேன். அப்போலேருந்து அவரை எனக்குத் தெரியும். செட்ல அவர் ரொம்ப சேட்டை பண்ணுவாரு. ரொம்பவே ஜாலியான கேரக்டர். நான் நடிச்சுட்டு இருந்தா, கேமரா பின்னாடி நின்னு ஏதாவது குறும்புப் பண்ணி, சிரிக்க வைச்சிடுவாரு. 
இப்போகூட சமீபத்துல் ஒரு சீன் எடுத்துட்டு இருந்தப்போ, ‘ஆவேசம்’ படத்துல வர்ற பகத் பாசில் மாதிரி கேமரா முன்னாடி நின்னுட்டு மாறி மாறி ரியாக்‌ஷன் பண்ணிட்டு இருந்தாரு. என்னால சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியல. ஆனா, அவர் எதுவுமே பண்ணாத மாதிரி பாவ்லா பண்ணிட்டு இருந்தாரு. நான்தான் சிரிச்சு திட்டு வாங்கிட்டேன்.’’ 

உங்க மேரேஜ் லைஃப் எப்படிப் போகுது? ஃபேமிலியையும் பாத்துட்டு, ஷூட்டிங்லயும் கவனம் செலுத்துறீங்களே! 

‘‘கல்யாண வாழ்க்கை நல்லா போகுது. ரெண்டையும் மேனேஜ் பண்ணுறதுக்கு டைம்தான் செட் ஆகல. 20 நாள் ஷூட்டிங் இருக் கும். 10 நாள் பிரேக். அந்த 10 நாள்ல கேரளா போயிடுவேன். வீட்ல இருக்குற நாள் கம்மிதான். கல்யாணம் பண்ணி வீட்ல சும்மா இருக்குறதவிட, ஏதோ ஒரு வேலைக்குப் போறது பெட்டர்னு நினைக்குறேன்.’’

உங்க நடிப்பு பற்றி கணவர் ஏதாவது சொல்வாரா?

‘‘மாமியாரும் மாமனாரும் தொடர்ந்து என் சீரியலை பார்ப்பாங்க. என் கணவர் முதல்ல பார்த்துட்டு இருந்தாரு. இப்போ அவரோட வேலை பிஸியால பார்க்கிறதில்ல. முன்னாடி பார்த்துட்டிருந்தப்போ ஏதாவது குறை இருந்தா சொல்வாரு. நல்லா பண்ணியிருந்தா, மனசு திறந்து பாராட்டுவாரு.’’

பொதுமக்கள்கிட்ட இருந்து உங்களுக்கு வந்த பெஸ்ட் கமென்ட்னா, எதைச் சொல்வீங்க?

‘‘அப்படி ஒரு கமென்ட்னு எதுவும் சொல்லமுடியாது. ஏன்னா, நான் இந்த சீரியல்ல முதல்ல நடிக்க ஆரம்பிச்சப்போ, சோஷியல் மீடியாவுல நெகடிவ் கமென்ட்தான் நிறைய வந்தது. அப்படி இருக்கும்போது, ‘நல்லா பண்ணிருக்கீங்க’னு ஒருத்தர் சின்னதா ஒரு கமென்ட் போட்டாக்கூட, அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். நான் இந்த இடத்துக்கு எப்படி வந்தேன்னு மத்த வங்களுக்குத் தெரியலனாலும், எனக்குத் தெரியும். அதனால, பாராட்டுற விதத்துல வர்ற எல்லா கமென்ட்ஸுமே எனக்கு ஸ்பெஷல்தான்.’’

எதிர்காலத்துல உங்க பிளான் சீரியலா, சினிமாவா?

‘‘எனக்கு சீரியல் வாய்ப்புக் கிடைச்சது கடவுள் தந்த வரம். நான் பண்ண படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள் இல்ல. சின்ன பட்ஜெட் படங்கள்தான். ஆனாலும், என்னைப் பொருத்தவரை அது பெஸ்ட்தான்.  மக்களுக்குத் தெரியுற மாதிரி ஏதாச்சும் ஒரு நல்ல கேரக்டர் பண்ணணும்னு நினைக்குறேன். நயன்தாரா நடிக்குற படங்கள்ல எல்லாம் சூப்பர் கேரக்டரை செலக்ட் பண்ணி நடிப் பாங்க. அதுமாதிரி கேரக்டர்கள் பண்ணணும்.’’

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

‘‘லவ் யூதான். இந்தப் பாசம் எப்பவும் இருக்கட்டும். ரசிகர்கள் எனக்காக கமென்ட்ஸ் பண்ணும்போது, அவங்களுக்கு நான் ரிப்ளை பண்ணுவேன். இல்லாட்டி, குறைஞ்சபட்சம் லைக்காவது பண்ணுவேன். ஏன்னா, நமக்காக அவங்க டைம் எடுத்து கமென்ட்ஸ் பண்றாங்க. அதுக்கு நாமளும் ஒரு மரியாதை செய்யணும்ல?’’   


பேட்டி: விஜயலட்சுமி, படங்கள்: ஸ்ரீநாத் வெங்கடேஷ்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow