டி.வி.யில் விளம்பரம்.. காதில் மைக்.. ஆன்மிக குருவுக்கு லட்சணமா? - விளாசும் செல்வராகவன்

தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் வைத்துக்கொண்டு, உங்களுக்கு தியானம் சொல்லித்தருகிறேன் என்று எல்லாம் சொல்லமாட்டார்கள் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Sep 10, 2024 - 21:16
Sep 11, 2024 - 09:47
 0
டி.வி.யில் விளம்பரம்.. காதில் மைக்.. ஆன்மிக குருவுக்கு லட்சணமா? - விளாசும் செல்வராகவன்
மஹா விஷ்ணு மற்றும் இயக்குநர் செல்வராகவன்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.

அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் ஆன்மிக குரு என்பவர் மற்றவர்களை தேடிச் செல்ல மாட்டார்கள் என்றும் டிவியில் விளம்பரம் கொடுக்க மாட்டார்கள் என்றும் மதங்களும் போதிப்பது என்ன என்பது குறித்தும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அதில் கூறியுள்ள இயக்குநர் செல்வராகவன், “யாரோ ஒருத்தர் ஏதோ உளறிக்கொண்டு இருக்கிறார். நான் ஆன்மிக குரு என்றெல்லாம் கண்டபடி பேசிக்கொண்டு இருக்கிறார். நீங்களும் படுக்கை, தலையணை எல்லாம் எடுத்துக்கொண்டு, போய் கண்ணை மூடிக்கொள்வீர்களா?

உண்மையான குரு என்பவர், நீங்கள் தேடிப்போக வேண்டாம். அவரே உங்களைத் தேடி வருவார். உங்களது சந்திப்பு தானாக நடக்கும். தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் வைத்துக்கொண்டு, உங்களுக்கு தியானம் சொல்லித்தருகிறேன் என்று எல்லாம் சொல்லமாட்டார்கள். முதன்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்திக்கவே மாட்டார்கள். நீங்க என்ன அவ்வளவு காய்ந்துபோய் கிடக்குறீர்களா தியானம் செய்வதற்கு?

நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். தியானம் தான் உலகத்திலேயே எளிமையான விஷயம், கடவுள் நம்முடன் இருக்கிறார் அப்படி என்பதுதான். இருப்பதிலேயே எளிமையானது புத்தரின் செயல்முறை தான். இது நீச்சல் குளத்தில் குதிப்பது போன்றது தான். ஒருநாள் நீச்சல் தன்னாலேயே வந்திடும். இதுக்கு மாற்று கருத்து என்பதே கிடையாது'' என்று பேசியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow