மதுரை டூ மும்பை… வேஷ்டி ஜிப்பாவில் ஹீரோ போல அசத்தல் அட்லி.. கலக்கல் போஸ்
இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாரந்தோறும் புது புது போட்டோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் பிறந்து தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டை கலக்கி வருகிறார் அட்லி. ஜிப்பா வேஷ்டி சட்டை கலக்கலாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் மனைவியோடு ஜோடியாக போட்டோ போடும் அட்லி இப்போது சோலோவாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் துவங்கி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்த அட்லி, ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கி வெற்றிப்படமாக 1000 கோடி கிளப்பில் இடம்பெற செய்துள்ளார்.
3. வெற்றியின் பாதையில்:
ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளியான ராஜா ராணி, அந்த ஆண்டின் குறிப்பிடத் தகுந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், ஃபிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றதால், முதல் படத்திலேயே அட்லியின் க்ராஃப் உச்சத்திற்குச் சென்றது.
What's Your Reaction?