மதுரை டூ மும்பை… வேஷ்டி ஜிப்பாவில் ஹீரோ போல அசத்தல் அட்லி.. கலக்கல் போஸ்

இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாரந்தோறும் புது புது போட்டோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் பிறந்து தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டை கலக்கி வருகிறார் அட்லி. ஜிப்பா வேஷ்டி சட்டை கலக்கலாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் மனைவியோடு ஜோடியாக போட்டோ போடும் அட்லி இப்போது சோலோவாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் துவங்கி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்த அட்லி, ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கி வெற்றிப்படமாக 1000 கோடி கிளப்பில் இடம்பெற செய்துள்ளார்.

Jul 11, 2024 - 18:21
 0
இயக்குநர் அட்லி:
2 / 8

2. இயக்குநர் அட்லி:

சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இந்தப் படம் பெரும் கவனத்தைப் பெற்றது.இதற்குப் பிறகு, ராஜா ராணி படத்தின் கதையை வைத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்களை அணுகிய நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ பேனரில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow