தனியார் பள்ளிகளுக்கு கவுரவம்... அரசு பள்ளிகள் புறக்கணிப்பு... - ஆசிரியர்கள் வேதனை

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Jul 11, 2024 - 18:11
Jul 12, 2024 - 11:59
 0
தனியார் பள்ளிகளுக்கு கவுரவம்... அரசு பள்ளிகள் புறக்கணிப்பு... - ஆசிரியர்கள் வேதனை
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் சர்ச்சை

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு எந்த வித விருதும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சார்ந்த பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதே நிகழ்ச்சியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்கேற்று சாதனை படைத்த தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகளும் கௌரவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை கவுரவிக்கின்ற போது, தலைமை ஆசிரியர்களை மட்டும் கவுரவித்த பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு விருது வழங்குகின்ற போது முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு அரசு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் மீது அரசின் பாரபட்சமான அணுகுமுறையை காட்டுவதாக, அரசு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்கள் தங்கள் வேதனையை தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் சாதனைக்கு, ஆசிரியர்களின் பங்களிப்பும் இருக்கின்ற போது, அதனை கண்டு கொள்ளாத அரசு, தனியார் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்கிற கேள்வியையும் ஆசிரியர்கள் தரப்பு முன்வைக்கின்றது.

100 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை மட்டும் கௌரவித்த தமிழக அரசு, தனியார் பள்ளிகளுக்கு விருது வழங்குகின்ற போது ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் என இருவருக்கும் விருது வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow