நான் யார்னு சிவனுக்கு தெரியும்.. ராயன் பட விழாவில் தனுஷ் பதிலடி

சென்னை: தனது 50வது படமான ராயன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், போயஸ்கார்டன் வீடு சர்ச்சை குறித்து விரிவாக பேசியுள்ளார். மேலும், தனது மீதான புகார்களுக்கு நான் யார்னு சிவனுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Jul 8, 2024 - 11:30
Jul 8, 2024 - 11:41
 0
நான் யார்னு சிவனுக்கு தெரியும்.. ராயன் பட விழாவில் தனுஷ் பதிலடி
Actor Dhanush Speech At Raayan Audio Launch Event

சென்னை: தனது 50வது படமான ராயன் பட இசை வெளியீட்டுவிழாவில் பேசிய தனுஷ், போயஸ்கார்டன் வீடு சர்ச்சை குறித்து விரிவாக பேசியுள்ளார். மேலும், தனது மீதான புகார்களுக்கு நான் யார்னு சிவனுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

துள்ளுவதோஇளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் தனுஷ். செல்வராகவன் இயக்கிய அந்த படம் 2002ம் ஆண்டு வெளியானது. 22 ஆண்டுகளில் தனது 40 யது வயதில் 50வது படத்தை தொட்டுள்ளார் தனுஷ். எஸ், ராயன் அவரின் 50வது படம், இந்த படத்தை அவரே இயக்கியுள்ளார். இதில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார்  அறந்தாங்கி நிஷா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சென்னையில் நடந்த ராயன் பட இசை வெளியீட்டுவிழாவில் தனது மீதான பல புகார்களுக்கு, சர்ச்சைகளுக்கு தனுஷ் நேரடியாக பதில் சொல்வார் அல்லது மறைமுகமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், தனுஷ் மீடியாவில் பேசி அல்லது பேட்டி கொடுத்து பல காலம் ஆகிவிட்டது. அதனால், ராயன் பாடல் வெளியீட்டுவிழாவை பலரும் ஆர்வமாக எதிர்பார்த்தனர்.  அது கிட்டத்தட்ட நடந்தது. பாடல் வெளியீட்டுவிழாவில் பேசிய தனுஷ், ‘‘இந்த படத்துக்கு ரகுமான்சார் இசையமைத்துள்ளார். என் 50 ஆவது படத்தில் நீங்கள் இருக்கணும்னு  ஆசைப்படுகிறேன் என்று  ரஹ்மான் சாருக்கு மெசேஜ் அனுப்பினேன். அவரோ 2 நாளில் பதில் சொல்கிறேன்.பின்னர் அவர் என்னை தொடர்பு கொண்டு, நான் இப்போது 30 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால உங்க படத்துக்கு ‘எஸ்’ சொல்வது கஷ்டம்தான். ஆனாலும், ‘எஸ்’ சொல்கிறேன்’ என்றார்.அவருக்கு மிக்க நன்றி. அவரால் எப்படி இவ்வளவு காலமும் நிலைக்க முடிகிறது என்று  ஆச்சர்யப்பட்டேன்”  என்றார்.


சென்னையில் கண்ணம்மாபேட்டை, சாலிகிராமம், கிண்டி டிபன்ஸ் காலனி, ராஜா அண்ணாமலைபுரம் போன்ற இடங்களில் வசித்த தனுஷ், இப்போது சென்னை போயஸ்கார்டனில் பெரிய வீடு கட்டி வசிக்கிறார். போயஸ்கார்டன் வீடு பற்றி, தனுஷ் பற்றி பல தகவல்கள் வந்தன. குறிப்பாக, ரஜினிக்கு போட்டியாக அல்லது ரஜினியுடன் ஏற்பட்ட மோதலால் அங்கே தனுஷ் வீடு கட்டியாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அந்த போயஸ்கார்டன் வீடு சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்து பேசினார் தனுஷ். ராயன் விழாவில் ‘‘16வது வயதில் தலைவர்(ரஜினி) வீட்டை பார்க்க வேண்டு போயஸ் கார்டனுக்கு சென்றேன்.  அங்கிருந்த போலீஸ்காரர்களிடம்கெஞ் சி அவர் வீட்டை பார்த்தேன்.

அவர் வீடு பக்கத்தில் ஜெயலலிதாம்மா வீடும் இருந்தது. அதனால் போயஸ் கார்டனில், ஒரு சின்ன வீடாவது கட்ட வேண்டும் என்று அப்போது  கனவு கண்டேன். அந்த விதை அப்போது விழுந்தது. இப்போது நடந்தது இருக்கிறது. அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபு(தனுசின் நிஜப்பெயர்)ஆசைக்கு, தனுஷ் கொடுத்த கிஃப்ட் தான், இப்போது போயஸ் கார்டனில் கட்டி இருக்கும் வீடு.போயஸ் கார்டனில் நான் வீடு கட்டியிருப்பது இவ்வளவு பேச்சாக எழும் என்று தெரிந்திருந்தால், நான் அங்கு கட்டியிருக்கவே மாட்டேன். நான் யார் ரசிகர் என்று உங்களுக்குத் தெரியும்.’’ என்றார். தனது பேச்சி்ல் ரஜினியை தலைவர் என குறிப்பிட்டதால் அவர் மீதான மரியாதை அப்படியே இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். போயஸ்கார்டன் வீடு கட்டும் பூஜைக்கு ரஜினி வந்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனது குருநாதரும், இயக்குனருமான அண்ணன்  செல்வராகவனையும் புகழ்ந்து பேசியுள்ளார். ‘‘எனக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்தது, வாழ்வில் போராட சொல்லிக் கொடுத்தது அவர்தான்.சென்னை கண்ணம்மாபேட்டை குடிசை வீட்டில் இருந்த என்னை, போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பதும் அவர்தான். மற்ற படப்பிடிப்பில்  இரண்டாவது டேக் சென்றால் கோபப்படுவேன். ஆனால் செல்வராகவனுக்கு என்றால், சந்தோஷப்படுவேன். காரணம், அவர் என்னை அவரது படங்களில் அவ்வளவு டார்ச்சர் செய்து வேலை வாங்கி இருக்கிறார். அதே டார்ச்சரை அவருக்கு கொடுப்பதும், அதில் அவர் கஷ்டப்படுவதும் சந்தோஷமாக இருந்தது. ’என்று புகழாராம் சூட்டியுள்ளார்.

ரசிகர்கள் குறித்து பேசுகையில்‘‘ ஆரம்பத்தில் நான்  நடிக்கும் பொழுது, சத்தியமாக நான் இவ்வளவு  இடம், பெரிய துாரம் வருவேன் என்று நினைக்கவில்லை. 
என்னை பற்றி அவ்வளவு கிண்டல்,  கேலிகள்,வமானங்கள். பல துரோகங்களை தாண்டி இங்கே நிற்கிறேன். அதற்கு நீங்க கொடுக்கும்  கரவொலி தான் காரணம்.ஒல்லியாக, கருப்பாக, இருந்த என்னிடம், எப்படி நீங்கள் கனெக்ட் ஆனீர்கள் என்று தெரியவில்லை..இங்கிலீஷ் ஒழுங்காக பேச தெரியாத என்னை, இங்கிலீஷ் படத்திலேயே நடிக்க வைத்தீர்கள்’’என்று பஞ்ச் வைத்தார்.

கடைசியில் சமீபகால தன் மீதான பல  புகார்களுக்கு, பலத்த சர்ச்சைகளுக்கு ‘‘ நான் யார் என்பது அந்தச் சிவனுக்கு தெரியும். என் அம்மா, அப்பாவுக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். என் மனசாட்சி பேச ஆரம்பித்தால் அது ஆபத்தில் முடியும்’’ என்று பேச்சை முடித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow