“இந்த படத்தில் நான் 2வது ஹீரோதான்” - சீக்ரெட்டை உடைத்த நானி!

‘அந்தே சுந்தரானிகி’ திரைப்பட ப்ரோமோஷன் விழாவில் பேசிய நடிகர் நானி, தான் இப்படத்தின் இரண்டாவது ஹீரோ என தெரிவித்துள்ளார்.

Aug 20, 2024 - 00:24
Aug 20, 2024 - 15:02
 0
“இந்த படத்தில் நான் 2வது ஹீரோதான்” - சீக்ரெட்டை உடைத்த நானி!
சீக்ரெட்டை உடைத்த நானி

நானி, பிரியங்கா மோஹன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அந்தே சுந்தரானிகி’ திரைப்படம் வருகிற 29ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் சென்னையிலும் நடைபெற்றது. 

அப்போது பேசிய படத்தின் நாயகன் நானி, “படத்தின் ஹீரோ நான்தான் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் நான் இரண்டாவது ஹீரோ தான். எஸ்ஜே சூர்யா தான் முதல் ஹீரோ. ஏனெனில் படத்தின் தலைப்பு கூட சூர்யாவுக்குத் தான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. மேலும் அவர் திரையில் வரும் போது கிடைக்கும் உத்வேகம் மிகவும் அபரிமிதமானது. படப்பிடிப்புத் தளத்திலும் அவருடைய உற்சாகம் அனைவருக்கும் பரவி விடும். அந்த அளவிற்கு எளிமையான மற்றும் மகிழ்ச்சியான மனிதர் அவர்” என்று புகழ்ந்து கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகை தரும்போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவை நான் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன்.‌ இங்கு மணிரத்னம், ஷங்கர், பாரதிராஜா சார் என ஏராளமான ஆளுமைகள் இருக்கிறார்கள். நான் நடித்த படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து படத்தைப் பற்றி பேசும் தமிழ் மக்களின் கருத்துக்களை நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்வேன்.‌ குறிப்பாக படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் ரியாக்சனை கவனிப்பேன்.‌ சென்னை விமான நிலையத்துக்கு வரும் போதெல்லாம் அங்கு ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரமிக்க வைக்கும். என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாகட்டும். நலம் விசாரிப்பதாகட்டும். அவர்கள் காட்டும் அன்பு சிறப்பானது. தொடர்ந்து என் மீது பாசத்துடன் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சி தெரிவித்தார். 

மேலும் படிக்க: ஏழை சிறுவனின் தாளா சுமையும், மரணமும்.. ‘வாழை’ திரைப்பட ட்ரெய்லர்

இதையடுத்து படத்தின் நாயகி பிரியங்கா மோஹன் குறித்து பேசிய அவர், “அவரது நடிப்பு அற்புதமாக உள்ளது. இறைவன் அவருக்கு நவரச பாவங்களை வெளிப்படுத்தும் முக அமைப்பை கொடுத்துள்ளார். அவர் கண் அசைவில் ஏராளமான விசயங்களை சொல்லி விடும் அளவிற்கு இயற்கையான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவர்தான் 'நேச்சுரல் ஸ்டார்', அவருடைய நடிப்புகள் அனைத்தும் இயற்கையாகவே இருக்கும்” என்று பாராட்டினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow