மிரட்டல் லுக்கில் அஜித்... திடீரென வெளியான விடாமுயற்சி செகண்ட் லுக்... என்ன காரணம் தெரியுமா?

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சர்ப்ரைஸ்ஸாக செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

Jul 8, 2024 - 16:47
 0
மிரட்டல் லுக்கில் அஜித்... திடீரென வெளியான விடாமுயற்சி செகண்ட் லுக்... என்ன காரணம் தெரியுமா?

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனால் இந்தப் படங்களின் ரிலீஸுக்காக அவரது ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர். மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்தாண்டு தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங், கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. பட்ஜெட் பிரச்சினையால் தான் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விடாமுயற்சி மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு. அதோடு சில தினங்களுக்கு முன்னர் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. அதில் அஜித் பங்கேற்றிருந்த நிலையில், கடந்த வாரம் ஷாலினிக்கு மைனர் சர்ஜரி இருந்ததால் அவசரமாக சென்னை திரும்பினார். இதனிடையே விடாமுயற்சி படத்தில் இருந்து அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களின் ட்ரோல் கன்டெண்ட்டாக வைரலானது. டைட்டில் அறிவிப்புக்குப் பின்னர் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தெறி மாஸ்ஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அஜித் டூர் பேக் ஒன்றை கையில் தூக்கியபடி கேஷுவலாக வால்க்கிங் போவதை போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். 

இந்த நிலையில் தான், விடமுயற்சி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்றிரவு சர்ப்ரைஸ்ஸாக வெளியிட்டது. இதில் அஜித்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி திருவினையாக்கும் என்ற கேப்ஷனுடன் உருவாகியுள்ள இந்த போஸ்டர்களின் ஒன்றில், அஜித் கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இன்னொன்று அஜித் கார் ட்ரைவ் செய்வதை போல் உருவாகியுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்களும் அஜித் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ்ஸாக அமைய, படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. அதாவது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சுமார் என ரசிகர்கள் அதிருப்தியானதால், அவர்களை கூல் செய்ய மிரட்டலாக இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளதாம் படக்குழு.

அடுத்தடுத்து விடாமுயற்சி அப்டேட்கள் வெளியாகி வருவதால், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. எனவே விடாமுயற்சியை அதற்கு முன்பாகவோ அல்லது இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாகவோ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே விடாமுயற்சி ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட்டும் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow