நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு… ஹீரோக்கள் மவுனம் காப்பதா? ஆதரவு கொடுங்கள் - ராதிகா கொதிப்பு

நடிகர்களாக உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அரசியல் ஆசை உள்ளது . அரசியலுக்கு சென்று அங்கு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் நடிகர்கள் இன்று உடன் பணியாற்றும் நடிகைகளுக்காக துணை நிற்கலாமே என ராதிகா கேட்டுள்ளார்.

Sep 2, 2024 - 17:37
Sep 3, 2024 - 10:24
 0
நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு… ஹீரோக்கள் மவுனம் காப்பதா? ஆதரவு கொடுங்கள் - ராதிகா கொதிப்பு
radhika sarathkumar

ஹேமா கமிட்டி குறித்து முன்னனி நடிகர்கள் மெளனம் காத்தால் தவறாகதான் தெரியும்.ரஜினி சமீபத்தில் ஹேமா கமிட்டி குறித்து கருத்து கூறிய நிலையில்  ராதிகா பதில்.உங்களுடைய மெளனம் தவறாக தான் தெரியும். ஆதரவாக தான் இருக்கிறேன் அவர்கள் கூறினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

மலையாள திரை உலகத்தில் எழுந்துள்ள பாலியல் புகாரினால் தமிழ் சினிமா உலகமே வெலவெலத்து போயிருக்கிறது. தினம் தினம் புதுப்புது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. தமிழ், தெலுங்கு திரை உலக நடிகைகளும் Me too புகாரை கிளப்பி வருகின்றனர். குட்டி பத்மினி, சாந்தி வில்லியம்ஸ், ராதிகா என பிரபல மூத்த நடிகைகள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கேரவன் வேனில் ரகசிய கேமரா வைத்து பெண்களின் நிர்வாண உடலை ரசித்த கயவர்கள் பற்றி ராதிகா கூறியது திரை உலகத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகத்தில் உள்ள ராதிகா இன்று பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். 

ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். திரையுலகில் மட்டுமல்ல; எல்லா துறைகளிலும் பிரச்சனை உள்ளது. கேரவன் விவகாரத்தில் தன்னை தொடர்புகொண்ட கேரள போலீசாரிடம் என்ன நடந்தது என விரிவாக எடுத்துக் கூறினேன். கேரள போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை என்ன நடந்தது என்பது குறித்து மட்டும் விளக்கம் அளித்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் நான் தனியாகதான் எதிர்கொண்டுள்ளேன். இப்போது வரை பெண்கள் போராடிதான் வருகிறோம்.
80 களில் இருந்து நான் பார்க்கிறேன் எனக்கு தெரியும் தமிழ் திரையுலகிலும் இருக்கிறது யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. தமிழ் திரையுலகில் ஒரு கமிட்டி வேண்டும் ஆனால் தமிழ் திரையுலகில் இப்போது குறைந்துவிட்டது.படித்த இளைஞர்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள் அதனால் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது.

இப்போது பிரதமர் சொல்லியிருக்கிறார் பெண்களுக்கோ குழ்ந்தைகளுக்கோ இது போன்று நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார் இது மனதிற்கு சற்றே ஆறுதல் அளிக்கிறது.விஷால் தமிழ் திரையுலகிற்கு ஹேமா கமிட்டி போன்று அமைக்கப்படும் என கூறியிருக்கிறார் அவர் இது குறித்து அறிவுரை ஏதும் என்னிடம் கேட்டால் அறிவுரை கூற தயார்.மேலும் நீதிமன்றத்தை நாடி அவர்கள் நீதியை தேடலாமே என்ற கேள்விக்கு  இது போன்ற பிரச்சனைக்கு உடனடி தீர்வு தேவை அங்கு சென்றாள் சாட்சி எங்கே என கேட்பார்கள்,  பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பொழுது பாதிக்கப்பட்டவர்கள் எப்படி அதை படம் பிடிக்க முடியும் எனவே சட்டத்தை நாடுவதில் சிக்கல் உள்ளது.செய்தியாளர்களாகிய நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருங்கள் என்றும் ராதிகா கேட்டுக்கொண்டார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow