நாய், காக்காவெல்லாம் கார்ல போகுது. நான் போகக்கூடாதா? மேடையில் பொங்கிய சிங்கம்புலி

Actor Singampuli Speech : சினிமாவில் வாய்ப்பு தேடியபோது, ஆரம்ப காலத்தில் ஒரு ஸ்டூடியோவி்ல் டார்க் ரூமில் தங்கியிருந்தேன். எல்லாம் துாங்கியபின் நான் நைசாக நுழைவேன், காலையில் மற்றவர்கள் வருவதற்குமுன்பு அங்கே இருந்து கிளம்பிவிடுவேன். அந்த சின்ன வெளிச்சத்தில் பல மாதங்கள் வாழ்ந்தேன்.’

Jul 16, 2024 - 15:58
Jul 16, 2024 - 17:05
 0
நாய், காக்காவெல்லாம் கார்ல போகுது.  நான்  போகக்கூடாதா?  மேடையில் பொங்கிய சிங்கம்புலி
Actor Singampuli At Park Movie Audio Launch Event

Actor Singampuli Speech : நடிகர் சிங்கம்புலிக்கு அறிமுகம் தேவையில்லை. குணசித்திர காமெடி கேரக்டரில் கலக்கி வருகிறார்.பலரும் அறியாத உண்மை. அவர் அடிப்படையில் இயக்குனர். அஜித் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி படங்களை இயக்கியவர். பின்னர் காலச்சூழல் காரணமாக நடிகரானார். லேட்டஸ்ட்டாக வெற்றி பெற்ற மகாராஜா படத்தில் வேறொரு பரிமாணத்திலும் சிங்கம்புலி நடிப்பில் கலக்கியிருந்தார். என் வெற்றி மட்டுமே பலருக்கு தெரியும். நான் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் பலருக்கும் தெரியாது என்ற ரீதியில், சென்னையில் நடந்த ‘பார்க்’ பட இசை வெளியீட்டு விழாவில் (Park Movie Audio Launch Event) அவர் பேசினார். அந்த பேச்சு பலரையும் உருக வைத்தது.

இ.கே.முருகன் இயக்கத்தில் தமன் நடிக்கும் இந்த படவிழாவில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட சிங்கம்புலி ஆரம்பத்தில் காமெடியாக பேச ஆரம்பித்தார். பின்னர், சீரியஸ் சப்ஜெக்ட்டுக்கு மாறினார். அவர் பேசுகையில் ‘‘இந்த பட இயக்குனர் முருகன் ஒரு காலத்தில் லாரன்ஸ் மாஸ்டரிடம் உதவியாளராக, டிரைவராக வேலை பார்த்தேன். பின்னர், படிப்படியாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்தேன் என்றார். அவர் உழைப்புக்கு பலன் உண்டு.  இந்தபட ஹீரோ தமனுடன் சேதுபூமி என்ற படத்தில் நடித்தேன். தமன் லேசுப்பட்டவர் அல்ல. அவர் அந்த காலத்திலேயே பல லட்சம் சம்பளம் வாங்கி, ஏர்லைன்ஸ் துறையில சந்தோஷமாக இருந்தார். பெரிய போஸ்ட்ல, பாரினில் இருந்தார். இப்ப சினிமா ஆசையில் இங்கே இருக்கிறார். பல படங்களில் நடித்தவர், இப்போது ஒரு நொடி என்ற நல்ல படத்தில் நடித்தார்.

பல படங்களில் நடித்து கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து 42வயதில்தான் எம்ஜிஆர் ஹீரோ ஆனார். சினிமா கஷ்டப்படுகிறவர்களுக்கு கண்டிப்பாக வெற்றி கொடுக்கும். சினிமாவில் வாய்ப்பு தேடியபோது,  ஆரம்ப காலத்தில் நான் தங்க இடம் கிடைக்காமல் ஒரு ஸ்டூடியோவி்ல் டார்க் ரூமில் தங்கியிருந்தேன். அந்த அறையில் சின்ன வெளிச்சத்தில் மட்டுமே லைட் இருக்கும். எல்லாம் துாங்கியபின் நான் அங்கே நைசாக நுழைவேன், காலையில் மற்றவர்கள் வருவதற்குமுன்பு அங்கே இருந்து கிளம்பிவிடுவேன். அந்த சின்ன வெளிச்சத்தில் பல மாதங்கள் வாழ்ந்தேன்’ என்றார்.

உதவி இயக்குனராக வாய்ப்பு தேடி அலைந்தபோது நண்பர்கள் அறையில் தங்கிருந்தேன். என் நண்பர்கள் பல பெரிய இயக்குனரிடம் வேலை செய்தேன். அவர்களுக்கு காலையில் கார் வரும் . நான் பொறுப்பாக அவர்களை காரில் ஏற்றிவிடுவேன். ஆளுக்கு பத்து ரூபாய் தருவார்கள். அதை வைத்து அன்றைய சாப்பாட்டை கவனிப்பேன். ஒரு கட்டத்தில் உதவி இயக்குனராக காரில் படப்பிடிப்புதளம் சென்றபோது, நான் வரும் காரில் ஒரு ஏரியாவி்ல் முக்கியமான ஆளை அழைத்து வானு புரடக் ஷன் மானேஜர் சொன்னார். முக்கியமான ஆளை காரில் அழைக்கப்போறேன்னு நினைத்தேன். காரில் ஒருவர் ஏறினார். அவர் கையில் சின்ன கூடை இருந்தது. அதை பார்த்தேன், அதில் ஒரு நாய் இருந்தது. இது இந்தி படத்தில் மாதுரி தீட்ஷித், சல்மான்கானுடன் நடித்ததுனு பில்டப் கொடுத்தார். நாய் ஏற்ற நானானு நினைத்தேன்.

அடுத்து இன்னொருவரை அழைச்சிட்டு வானு ஆர்டர் வந்தது. அங்கே சென்றால் பிரபல நடிகர், மூத்த நடிகர் காக்காராதாகிருஷ்ணன் இருந்தார். அந்த சமயத்தில் நான் செய்தால் குறும்பால் நாய் குரைக்க, நாய் வண்டியில் நானா? நான் வரமாட்டேன்னு கோபித்துக்கொண்டார். கடைசியில் நான் சமாதானம் செய்தேன். நீ வரக்கூடாது என்றார். அப்போது கோபத்தில் ‘‘இந்த காரில் நாய் வருது, காக்கா வருது, சிங்கம்புலி வரக்கூடாதா’’னு கேட்க, அவரோ, ‘‘நீ நல்லா பேசுறே’’ என்னை கட்டி பிடித்தார். ‘‘அய்யோ நீங்க எவ்வளவு பெரிய ஆளு, மனோகரா படத்துல உலகத்துல இரண்டுபேர் ஒன்று வைக்கப்போர், இன்னொன்று அக்கப்போர்னு சொல்கிற வசனத்தை எத்தனைமுறை ரசித்தேன்’’ என்றேன். பிற்காலத்தில் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்தபோது அவரின் மேனரிசங்களை பயன்படுத்தி, அப்பாவியாக நடித்தேன் ’என்றார்

பின்னர், சினிமாவில் கஷ்டப்படுகிறவர்கள், வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார் சிங்கம்புலி. அதில் ‘‘சினிமாவில் வாய்ப்பு வரலையேனு கவலைப்படாதீங்க. காத்திருப்பு, பொறுமை தேவை. நமக்கு கண்டிப்பாக வாய்ப்பு வரும் நினைத்து தயாராக இருங்க. திருடாதே, பொய் சொல்லாதே, துரோகம் செய்யாதே. உனக்கு கண்டிப்பாக வாய்ப்பு வரும். உங்களை சுற்றி நிறைய கெட்டது இருக்கும். நல்லது துாரத்தில்தான் இருக்கும்.நல்லதை மட்டும் நீ தேர்ந்தெடு.. சினிமாவில் வயது தடையல்ல. அசிங்கப்பட்டால்தான் வாழ்க்கை, வாய்ப்பு. நானெல்லாம் எவ்வளவோ அசிங்கப்பட்டு இருக்கிறேன்.’’ என்று பாசிட்டிவ்வாக முடித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow