TVK Vijay: நாளை தவெக கொடி அறிமுகம்… ஒரேநாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்..? விஜய்யின் மெகா பிளான்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிமுகப்படுத்தவுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது கட்சி நிர்வாகிகளுக்கு மிக முக்கியமான வேலை ஒன்றை கொடுத்துள்ளாராம் விஜய்.

Aug 21, 2024 - 10:25
Aug 21, 2024 - 16:16
 0
TVK Vijay: நாளை தவெக கொடி அறிமுகம்… ஒரேநாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்..? விஜய்யின் மெகா பிளான்!
நாளை தவெக கொடி அறிமுகம்

சென்னை: விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் கோட் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. அதேபோல், ஒருபக்கம் கோட் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீயாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா இல்லையா என்பது தான் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு.

அதேநேரம் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நாளை (ஆக.22) அறிமுகம் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கவுள்ளதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதோடு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்பதை அறிமுகப்படுத்தி உறுப்பினர்கள் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது தனது கட்சியின் பெயரில் அறிக்கைகளும் வாழ்த்துச் செய்திகளும் வெளியிட்டு வரும் விஜய், தவெக கொடியை அறிமுகப்படுத்துகிறார்.

சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த கொடி அறிமுக நிகழ்ச்சியில், தவெகவின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் பங்கேற்கும்படி விஜய் உத்தரவிட்டுள்ளாராம். கட்சி அலுவலகத்தில் தவெக கொடி ஏற்றப்பட்ட பின்னர், தமிழ்நாடு முழுவதும் அதனை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். அதற்காக 3000 கொடிகள் தயார் செய்யப்பட்டு ரெடியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், தவெக கொடி அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவிடக் கூடாது. மேலும், எந்த ஒரு கொடிக் கம்பமும் விதிகளுக்கு அப்பாற்பட்டு நிறுவப்பட்டுள்ளதாகக் கூறி அரசு நிர்வாகத்தால் அகற்றப்பட்டுவிடக் கூடாது. இதில் கவனமாக இருக்க வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளாராம். பனையூர் வரும் தவெக நிர்வாகிகளிடம் தேவையான அளவு கொடிகளை கொடுத்து, அவைகளை ஏராளமான கிராமங்களில் நிறுவ வேண்டும் எனவும் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக கோட் வெளியாகும் போது, அதனை பார்க்க தியேட்டர் செல்லும் தவெக தொண்டர்கள், கட்சியின் பெயரை விளம்பரப்படுத்தக் கூடாது என விஜய் ஆர்டர் போட்டிருந்தார். ஆனால், அதனையும் மீறி விஜய்யின் ரசிகர்கள் கோட் ரிலீஸாகும் தியேட்டர்களில் தவெக கொடியை ஏற்ற பிளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி தவெக நிர்வாகிகள் கொடியை ஏற்ற முடிவு செய்திருந்தால், திரையரங்குகளில் கூட்ட நெரிசலோ அல்லது தள்ளுமுள்ளு ஏற்பட்டோ ஏதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது எனவும் விஜய் அட்வைஸ் செய்துள்ளாராம்.

விஜய்யின் கோட் தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சுமார் 50 லட்சம் பேர் வரை கோட் படத்தை தியேட்டரில் பார்க்க வருவார்கள் எனவும், அவர்கள் அனைவரிடமும் தவெக கொடியை விநியோகிக்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளாராம். இதன்மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல லட்சம் புதிய உறுப்பினர்கள் வருவார்கள் எனவும், மக்களிடம் தவெக பற்றிய அறிமுகம் கிடைக்கும் என்றும் விஜய் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - கோட் Mode-ல் அப்டேட் கொடுத்த டாப் ஸ்டார் பிரசாந்த்! 

முக்கியமாக கொடிக் கம்பங்கள் அனைத்தும், அகற்றமுடியாத அளவிற்கு நல்ல உறுதியாகவும் உயரமாகவும் இருக்க வேண்டும் எனவும் விஜய் கூறியுள்ளாராம். தவெக கொடி அறிமுகப்படுத்தும் அதே நாளில், விஜய்யின் தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow