GOAT: “சுயநலவாதி வெங்கட் பிரபு..” கோட் சர்ச்சை... ஹேஷ்டேக்கில் தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
விஜய் நடித்துள்ள கோட் படத்தில் அஜித்தை ரெஃபரன்ஸ் செய்து காட்சிகள் வைத்திருந்தார் வெங்கட் பிரபு. இதுவே கோட் படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாக அமைந்த நிலையில், தற்போது சுயநலவாதி வெங்கட்பிரபு என ஷேஷ் டேக் போட்டு, அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
சென்னை: விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் திரைப்படம், இந்த வாரம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், இதுவரை 300 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோட் படத்துக்கு பெரிய அளவில் ஓபனிங் இருந்தாலும், கலவையான விமர்சனங்களே கிடைத்தன. விஜய் கேரியரில் கோட் சூப்பர் ஹிட் மூவியாக அமைந்தாலும், அடுத்தடுத்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக அஜித் ரசிகர்களால் இயக்குநர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர். கோட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் பற்றி அதிகமாக பேசியிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதாவது கோட் படம் கன்ஃபார்ம் ஆன உடனேயே அஜித் என்னை பாராட்டியிருந்தார். அதோடு மங்காத்தாவை விட கோட் படம் நூறு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்ததாகவும் வெங்கட் பிரபு பேசியிருந்தார். அதேபோல், கோட் ரிலீஸுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர், இப்படத்தில் அஜித்தின் ரெஃபரன்ஸ் இருக்கும் என ஹைப் கொடுத்திருந்தார்.
இதனால் விஜய்யின் கோட் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. வெங்கட் பிரபு சொன்னபடி, அஜித் ரெஃபரன்ஸ் மட்டுமில்லாமல் ரஜினி, கமல், சூர்யா ஆகியோரையும் கோட் படத்தில் ஏதோ ஒருவகையில் பயன்படுத்தியிருந்தார் வெங்கட் பிரபு. அதேபோல், சிவகார்த்திகேயன், த்ரிஷா ஆகியோர் கேமியோவாகவும் நடித்திருந்தனர். இதில் அஜித்தை ரெஃபரன்ஸாக பயன்படுத்தியது தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் கடும் சர்ச்சையாகியுள்ளது.
மேலும் படிக்க - 1000 கோடி கனவில் தளபதி விஜய்... கோட் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன?
அதாவது கோட் படத்துக்கு பயில்வான் ரங்கநாதன் பாசிட்டிவாக விமர்சனம் கொடுக்க, அதனை விஜய் ரசிகர் ஒருவர் தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். அதில் அஜித்துக்கு சப்போர்ட்டாக பேசும் பயில்வான் ரங்கநாதன், இப்ப விஜய்யின் கோட் படத்தை பாராட்டியிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்விட்டர் பதிவு தகாத வார்த்தைகளால் இருந்தது தான் இதிலிருந்த மிகப் பெரிய பிரச்சினை. ஆனால், இதனை ஏஜிஎஸ் நிறுவனம் ரீ-ட்வீட் செய்ய, அஜித் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். அதோடு, தரம்கெட்ட ஏஜிஎஸ் எனவும் டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த சர்ச்சையில் இப்போது இயக்குநர் வெங்கட் பிரபுவும் சிக்கியுள்ளார். அதாவது கோட் கிளைமேக்ஸில் ‘தல’ என்ற வார்த்தை இடம்பெறும் வசனம் ரசிகர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தல என்றால் தமிழ்நாட்டில் அஜித் தான், ஆனால், அது கிரிக்கெட் வீரர் தோனி என படக்குழு தரப்பில் இருந்து ப்ரோமோட் செய்வதாக சர்ச்சையாகியுள்ளது. இதனால் வெங்கட் பிரபுவை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கோட் ரிலீஸுக்கு முன்னர் தல அஜித் ரெஃபரன்ஸ் என சொல்லிவிட்டு, இப்போது தோனியை ப்ரோமோட் செய்வது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், ‘சுயநலவாதி வெங்கட்பிரபு’ என ஹேஷ்டேக் போட்டு டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது ‘சுயநலவாதி வெங்கட் பிரபு’ ஹேஷ்டேக் தான் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?