Vinayagar Chaturthi 2024 : விநாயகர் அவதாரம் … யானை முக கடவுள்.. முழு முதற்கடவுளானது எப்படி தெரியுமா?

Ganesha Chaturthi 2024 Vinayagar Avatharam Purana Story in Tamil : ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி திதியன்று முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்தார். விநாயகர் யானை முகம் கொண்டவர். ஒன்பது நவகிரகங்களை தன் உடலில் வைத்திருப்பவர். எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கும் முன்பாக முழு முதற் கடவுளான விநாயகரை வணங்கி ஆரம்பித்தால் தடைகள் இல்லாமல் காரியங்கள் நிறைவேறும். அத்தகைய சிறப்புகள் பெற்ற விநாயகர் பிறந்த கதையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Sep 2, 2024 - 17:54
Sep 3, 2024 - 10:18
 0
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் அவதாரம் … யானை முக கடவுள்.. முழு முதற்கடவுளானது எப்படி தெரியுமா?
Ganesha Chaturthi 2024 Vinayagar Avatharam Purana Story in Tamil

Ganesha Chaturthi 2024 Vinayagar Avatharam Purana Story in Tamil : கணங்களின் அதிபதி கணபதி.விக்னங்களை தீர்ப்பவர் என்றால் விக்னேஷ்வரன் என்று போற்றப்படும் விநாயகர் அவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதி.யானை முகக் கடவுளான விநாயகரை முழுமுதற்கடவுளாக அனைவரும் வணங்குகிறோம். விநாயகர் அவதாரம் நிகழ்ந்தது எப்படி? யானை முகம் வந்தது எப்படி என்பது பற்றிய புராண கதையை அறிந்து கொள்வோம். 

ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயத்தில், பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காப்பதற்காக, தான் நீராடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சந்தனத்தை எடுத்து உருவம் ஒன்றை உருவாக்கினார். பிறகு பார்வதிதேவி, தான் உருவாக்கிய சந்தன உருவத்திற்கு, தன் அனுக்கிரகத்தால் உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டு உருவானதால், அந்த உருவம் அவருடைய பிள்ளை ஆனது.பிறகு பார்வதி தேவி, தான் நீராடி வரும் வரை எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது எனப் பிள்ளையாருக்கு கட்டளையிட்டு விட்டு நீராடச் சென்று விட்டார். 

அப்பொழுது அங்கு வந்த சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவ பெருமான், பிள்ளையாரிடம் தான் யார் தெரியுமா என்று கேட்டார். அதற்கு விநாயகரோ, தாம் யாராக இருந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார். இதனால் சிவனுக்கும் பிள்ளையாருக்கும் சண்டை நிகழ்ந்தது. அந்த பிள்ளையின் தலையை வெட்டிவிட்டு உள்ளே சென்றார் சிவபெருமான். 

பார்வதி தேவியார் நீராடி முடித்து வெளியே வந்து பார்த்தபோது, பிள்ளையார் தலை இல்லாமல் கிடந்தார். பிள்ளையாரின் கோலத்தை பார்த்து கடும் கோபமும், ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவபெருமான், சிதைத்து விட்டதை அறிந்த பார்வதிதேவி, அங்கிருந்து வெளியேறி காளியாக உருவெடுத்து, மூவுலகிலும் தன் கண்ணில் படுகின்ற அனைத்தையும் அழிக்கத் தொடங்கினார்.

காளியின் ஆவேசத்தைக் கண்டு தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். என்ன செய்வதென்று அறியாத தேவர்கள், சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்காக சிவபெருமான், தனது கணங்களை அழைத்து வட திசைக்கு சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையை வெட்டி வருமாறு கட்டளையிட்டார். 

சிவபெருமானின் கட்டளையை ஏற்று கணங்கள் வடதிசை நோக்கிச் சென்றன. அப்பொழுது அவர்களுக்கு ஒரு யானை தான் முதலில் தென்பட்டது. அந்த யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று சிவபெருமானிடம் கொடுத்தனர். அவர் அந்த யானையின் தலையை வாங்கி, வெட்டுப்பட்டு கிடந்த பிள்ளையாரின் உடலுடன் வைத்து உயிரூட்டினார். இதைக் கண்ட பார்வதி தேவி மனமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார். 

பிறகு யானையின் தலையும், மனித உடலுடன் இருக்கும் பிள்ளையாருக்கு கணேசன் எனப் பெயர் சூட்டி, பிள்ளையாரைத் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார். இதுவே விநாயகர் பிறந்த கதையாகும். இவர் அவதரித்த ஆவணி மாத சதுர்த்தி திதி  விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திதி வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. விநாயகர் பிள்ளைகளின் செல்ல கடவுள். எனவே கொழுக்கட்டையும், மோதகமும், இனிப்பு பொருட்களும் பழங்களையும் வைத்து விநாயகரை நாம் வழிபடுகின்றோம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow