மதுரை டூ மும்பை… வேஷ்டி ஜிப்பாவில் ஹீரோ போல அசத்தல் அட்லி.. கலக்கல் போஸ்
இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாரந்தோறும் புது புது போட்டோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் பிறந்து தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டை கலக்கி வருகிறார் அட்லி. ஜிப்பா வேஷ்டி சட்டை கலக்கலாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் மனைவியோடு ஜோடியாக போட்டோ போடும் அட்லி இப்போது சோலோவாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் துவங்கி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்த அட்லி, ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கி வெற்றிப்படமாக 1000 கோடி கிளப்பில் இடம்பெற செய்துள்ளார்.
1. மதுரை டூ சென்னை:
அட்லியின் உண்மையான பெயர் அருண் குமார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 1986 செப்டம்பர் 21ஆம் தேதி பிறந்த அட்லி சென்னையில் உள்ள சத்யபாமா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பி.எஸ்சி படித்து முடித்து விட்டு இயக்குநர் சங்கரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். ஷங்கர் இயக்கிய நண்பன், எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார்.
What's Your Reaction?