Vettaiyan: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தேதி... செம மாஸ்ஸாக வெளியான அப்டேட்!

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Aug 19, 2024 - 15:47
Aug 19, 2024 - 15:55
 0
Vettaiyan: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தேதி... செம மாஸ்ஸாக வெளியான அப்டேட்!
வேட்டையன் ரிலீஸ் தேதி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. லைகா தயாரிப்பில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். லால் சலாமில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக அவரது காட்சிகள் அதிகமாக வைக்கப்பட்டன. ஆனாலும் லால் சலாம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றிப் பெறவில்லை. அதேபோல், இந்தப் படம் இதுவரை ஓடிடியில் வெளியாகாமல் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து லைகா பேனரில் தசெ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்திலும் ஹீரோவாக நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

சூர்யா நடித்த ஜெய்பீம் மூலம் பிரபலமான தசெ ஞானவேல், வேட்டையன் படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார். அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரையும் ரஜினியுடன் நடிக்க வைத்துள்ளார். இதனால் வேட்டையன் படத்துக்கு பான் இந்தியா அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இத்திரைப்படத்தில் ரஜினி ரிட்டையர்ட்டு போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், மரண தண்டனைக்கு எதிரான கருத்தியல் கொண்ட படமாக வேட்டையன் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்டையன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதை அடுத்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி தற்போது வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வேட்டையன் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வேட்டையன் அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என படக்குழு அப்டேட் கொடுத்திருந்தது. ஆனால், ஷூட்டிங் முழுமையாக முடியவில்லை என்பதால், ரிலீஸ் தேதியை மட்டும் படக்குழு அறிவிக்கவில்லை. 

மேலும் படிக்க -  லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அமீர்கான்

அதேநேரம் இமயமலை சென்றிருந்த ரஜினிகாந்த், வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என தனது குருஜியிடம் சொன்ன வீடியோ வைரலானது. இதனிடையே சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்போது ரஜினியின் வேட்டையன் படத்துக்குப் போட்டியாக கங்குவா வெளியாகிறதா என ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவரோ வேட்டையன் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனவும், கண்டிப்பாக ரஜினி சார் படத்துடன் கங்குவா வெளியாகாது என்றும் கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி கங்குவா முதல் பாகம் வெளியாகி அதன் ரிசல்ட்டை பார்த்த பின்னர், இரண்டாம் பாகம் வெளியாகும் போது வேறு எந்த படங்களும் அதற்கு போட்டியாக வராது என கெத்தாக கூறியிருந்தார். இதனால் வேட்டையன் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கங்குவா வந்தாலும் பரவாயில்லை, அதேநாளில் வேட்டையனை ரிலீஸ் செய்துவிடலாம் என ரஜினி சிக்னல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து தற்போது அபிஸியல் அப்டேட் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow