Coolie: “முடிச்சுடலாமா..?” கூலி படத்தின் கேரக்டர் அப்டேட்... ரஜினி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆக.28) ஸ்பெஷல் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Aug 27, 2024 - 19:13
Aug 27, 2024 - 19:28
 0
Coolie: “முடிச்சுடலாமா..?” கூலி படத்தின் கேரக்டர் அப்டேட்... ரஜினி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!
கூலி கேரக்டர் அப்டேட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. விஜய், கமல்ஹாசன், கார்த்தி ஆகியோருக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷ், ரஜினிக்கும் அப்படியொரு தரமான சம்பவம் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விக்ரம் படத்தின் வெற்றியை பார்த்து மெர்சலான ரஜினி, லோகேஷ் கனகராஜ் தான் எனது கடைசி படத்தை இயக்க வேண்டும் என சொன்னதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ரஜினியின் கடைசி படமாக கூலி இருக்காது எனவும், அதன்பின்னரும் அவர் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கூலி படத்தில் யாரெல்லாம் நடிக்கின்றனர் என்பது பற்றி இதுவரை எந்த அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை. முன்னதாக வெளியான கூலி டைட்டில் டீசரில் கூட, ரஜினி மட்டுமே சிங்கிளாக வந்து கெத்து காட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூலி படப்பிடிப்பில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசனும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை ரச்சிதா ராம், மலையாளத்தில் இருந்து செளபின் சாஹிர் போன்ற மேலும் பல பிரபலங்களும் கூலி படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது.

விக்ரம், லியோ வரிசையில், கூலி படத்திலும் பான் இந்தியா நடிகர்களை களமிறக்க முடிவு செய்துள்ளாராம் லோகேஷ். இதனால் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு நாளை முதல் சர்ப்ரைஸ் அப்டேட் கொடுக்க ரெடியாகிவிட்டது படக்குழு. அதன்படி கூலி படத்தின் கேரக்டர் அப்டேட் நாளை (ஆக.28) மாலை 6 மணி முதல் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ’முடிச்சுடலாமா’ என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த அப்டேட், ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க - அதிகாலை 4 மணிக்கு கோட் FDFS... கடுப்பான விஜய் ரசிகர்கள்!

இந்த அப்டேட்டில் முதலாவதாக ஸ்ருதிஹாசன் கேரக்டர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும், அடுத்தடுத்து சத்யராஜ், உபேந்திரா, ரச்சிதா ராம் ஆகியோரது கேரக்டர்கள் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர சில சர்ப்ரைஸ் அப்டேட்கள் இருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கூலி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் கேமியோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கூலி கேரக்டர் அப்டேட்களை தொடர்ந்து இறுதியாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகுமா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கூலி படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, உபேந்திரா நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ்.

கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது சம்மர் ஸ்பெஷலாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி வெளியாகலாம். அதனுடன் சிவகார்த்திகேயன் – ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படமும் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இதனால் கூலி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இதுவரை கன்ஃபார்ம் செய்யவில்லை எனவும், விரைவில் அதுவும் அறிவிக்கப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow