Kanguva Trailer: ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான கங்குவா ட்ரெய்லர்... சூர்யா ரசிகர்களோட மைண்ட் வாய்ஸ்!
Actor Suriya Kanguva Movie Trailer Released Now : சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள கங்குவா அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Actor Suriya Kanguva Movie Trailer Released Now : சூர்யா நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கங்குவா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. சிவா இயக்கியுள்ள கங்குவா பீரியட் ஜானரில் ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ளது. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இத்திரைப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆரம்பம் முதலே கங்குவாவுக்கு அதிக ஹைப் இருந்த நிலையில், தற்போது வெளியான ட்ரெய்லர் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
இயக்குநர் சிவா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள கங்குவா ட்ரெய்லர்(Kanguva Trailer Released), தரமான விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. ஹாலிவுட் படங்களைப் போல ராவான ஆக்ஷன் காட்சிகள், கலர்ஃபுல்லான சினிமோட்டோகிராபி, சூர்யாவின் ஹை-டெசிபல் கர்ஜனை என தாறுமாறாக சம்பவம் செய்துள்ளது. டோலிவுட்டில் உருவான பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா சினிமாவுக்கே சவால் விட்டார் ராஜமெளலி. அப்போது முதல் பீரியட் ஜானர் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதனால் மணிரத்னமும் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கினார்.
அதேபோல், கங்குவா திரைப்படமும்(Kanguva Movie Trailer) இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஜினியின் அண்ணாத்த படுதோல்வி அடைந்ததால், இயக்குநர் சிவா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து கங்குவா படத்தை இயக்கியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கங்குவா ட்ரெய்லரை எத்தனைமுறை பார்க்குறதுன்னே தெரியல... தொடர்ந்து எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்... இயக்குநர் சிவா தான் செம மாஸ் என இன்னொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க - அந்தகன் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
முன்னதாக கங்குவா முதல் பாகம்(Kanguva Part 1 Trailer) வெளியான பின்னர், இதன் இரண்டாம் பாகத்துக்குப் போட்டியாக வேறு எந்தப் படமும் ரிலீஸாகாது என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். அது உண்மையாக இருக்கும் எனவும் தற்போது சூர்யா ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் ரியலான ஆக்ஷன் காட்சிகளும் கோலிவுட் ரசிகர்களுக்கு கண்டிப்பாக புது அனுபவமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வில்லத்தனமான நடிப்பில் பாபி தியோலும் தாறுமாறாக மிரட்டியுள்ளார். அதேநேரம் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், குழந்தைகளோடு இப்படத்தை பார்க்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
'கங்குவா' டிரெய்லர் வெளியானது..!#kumudam | #kumudamnews | #kumudamnews24x7 | #ganguva | @Suriya_offl | @Karthi_Offl | @StudioGreen2
| @chiyaanCVF | #trailer | #viral |#Trending | #OutNow | @thedeol | #CinemaUpdate | #newrelease | pic.twitter.com/LTOW7gLcSU — KumudamNews (@kumudamNews24x7) August 12, 2024
கங்குவா படத்தில் சூர்யாவுடன்(Actor Suriya with Karti in Kanguva Movie) அவரது தம்பி கார்த்தியும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுகுறித்து தற்போது வெளியான ட்ரெய்லரில்(Kanguva Trailer) எந்த லீடும் இல்லை. கங்குவா இரண்டாம் பாகத்தில் கார்த்தி தான் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கங்குவா ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?






