மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் இன்று காலை காலமானார்.

Aug 8, 2024 - 11:12
 0
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்
buddhadeb bhattacharya passed away

மேற்கு வங்க இடதுசாரி அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக பணியாற்றிய மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்க மாநில முதல்வராக 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தார். 2015ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கினார் புத்ததேவ். முதலில் சிபிஎம் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பதவியையும் பின் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் புத்ததேவ்.

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த இடது முன்னணி அரசு காலத்தில் ​​பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி முதலமைச்சராக இருந்தார். அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். 

80 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு முதுமையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் இருந்தன. அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் புத்ததேவ் பட்டாச்சார்யா.ஜோதிபாசுக்கு பிந்தைய மேற்கு வங்க அரசியலில் புத்ததேவ் பட்டாச்சார்யா இடதுசாரிகளின் முகமாக திகழ்ந்தவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் இன்று காலை காலமானார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow