ஹாஃப் ஒயிட் புடவையில்.. பட்ஜெட் தாக்கல் செய்ய கெத்தாக கிளம்பிய நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman Saree On Budget Day 2024 : 3வது முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Jul 23, 2024 - 10:41
Jul 23, 2024 - 11:27
 0
ஹாஃப் ஒயிட் புடவையில்.. பட்ஜெட் தாக்கல் செய்ய கெத்தாக  கிளம்பிய நிர்மலா சீதாராமன்
Nirmala Sitharaman Saree On Budget Day 2024

Nirmala Sitharaman Saree On Budget Day 2024 : இந்தியாவே எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பட்ஜெட் உரையுடன் நாடாளுமன்றத்திற்கு புறப்பட்ட நிர்மலா சீதாராமன் என்ன கலர் புடவை அணிந்திருந்தார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இன்றைய தினம் ஹாஃப் ஒயிட் கலர் நிற புடவை அணிந்து வாடாமல்லி கலர் பார்டரும் அதற்கு மேட்ச் ஆக ப்ளவுஸ் அணிந்து செய்தியாளர்கள் முன் தோன்றினார். 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுவாகவே எளிமையான புடவையைதான் அணிவார். கோவில் விழாக்களில் பங்கேற்கும் போது பட்டுப்புடவைகளை அணிந்து பங்கேற்பார். சில்க் காட்டன் புடவைகளைத்தான் அவர் விரும்பி அணிவார். ஒவ்வொருமுறை பட்ஜெட் தாக்கலின்போதும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடுத்தும் புடவையின் நிறம் என்ன? அவர் என்ன விதமான புடவையை அணியபோகிறார் என்று அனைவரின் கவனமும் முக்கியமாக பெண்களின் கவனமும் இருக்கும்.

பட்ஜெட் முன்பு அல்வா கிண்டும் நாளிலும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் புடவையை மக்கள் தவறாமல் கவனிப்பார்கள். இதுவரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த 6 முறையும் 6 விதமான புடவைகளை கலர் டிசைனில் புடவைகளை அணிந்து வந்துள்ளார். அது முற்றிலுமாக பேசும் பொருளாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்றைய தினம் ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த புடவை சற்றே வித்தியாசமானதாக இருந்தது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றார். ஒவ்வொரு முறையும் இந்திய பாரம்பரிய கைத்தறி நெசவுகளை நெய்யும் நெசவாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் நாட்களில், பாரம்பரிய ஆடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய கிளம்பும் போதே என்ன கலர் புடவை அணிந்து வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்திதான் முதலில் வெளியாகும். 

ஆந்திரா - தெலுங்கானா: 

2019ஆம் ஆண்டு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த போது இளஞ்சிவப்பு மங்களகிரி பட்டு சேலையை அணிந்திருந்தார். இந்த வகை புடவைகள் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரியில் நெசவு செய்யப்படுகிறது. 2020-2021 மத்திய பட்ஜெட் தாக்கலின் போது  நிர்மலா சீதாராமன் மஞ்சள் நிற பட்டுப் புடவையில், தங்கச்செயின், வளையல்கள் மற்றும் சிறிய காதணிகளுடன் வருகை புரிந்தார்.

மத்திய பட்ஜெட் 2021: 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மூன்றாவது பட்ஜெட் தாக்கலின்போது, தெலங்கானாவின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக, வெள்ளை நிற டிசைன் மற்றும் தங்க நிற பார்டர் கொண்ட மிருதுவான வெள்ளை நிற போச்சம்பள்ளி பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.

மத்திய பட்ஜெட் 2022:

நிர்மலா சீதாராமன் தனது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது,மிக எளிமையான மற்றும் மிருதுவான பழுப்பு நிற போம்காய் புடவையை அணிந்திருந்தார். இது ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த போம்காய் கிராமத்தின் கைத்தறி புடவையாகும்.


2023ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஐந்தாவது பட்ஜெட் தாக்கலின் போது கருப்பு மற்றும் தங்க நிற பார்டர் கொண்ட வெர்மில்லியன் (vermillion) சிவப்பு பட்டுப் புடவையை அணிந்திருந்தார். 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 
 நீல கலர் புடவையில் க்ரீம்கலர் ப்ளவுஸ் அணிந்து கையில் சிவப்பு நிற பேக் உடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார்.


2024 பட்ஜெட் ஹாஃப் ஒயிட் கலர்:

இன்று காலையில் நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட் குழுவினருடன் செய்தியாளர்கள் முன்னால் தோன்றிய போது ஹாஃப் ஒயிட் நிற புடவையில் வாடாமல்லி கலர் ஜரிகை பார்டர் வைத்து நெய்யப்பட்ட புடவையை அணிந்து இருந்தார். அவரது கையில் பாரம்பரிய பாஹி கட்டா-ஸ்டைல் பையில் ஒரு டேப்லெட் இருந்தது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். குடியரசுத் தலைவரிடம் பட்ஜெட் தாக்கலுக்கான அனுமதியை பெற்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். பிரதமரை சந்தித்த பிறகு அவைக்கு வந்து தன்னுடைய ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  

தொடர்ந்து 7வது முறை பட்ஜெட் தாக்கல்:

3வது முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட்டை இதுவாகும். தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற  மொரார்ஜி தேசாயின் பெருமையை முறியடித்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow