வைரல் காணொளி; கேமராவில் சிக்கிய சில்மிஷ மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பறைக்குள்ளே வைத்து முத்தமிட்டுக்கொள்ளும் காணொளி இணையவாசிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்போதெல்லாம் சமூகவலைதளம் பக்கம் போனாலே பல அதிர்ச்சிகர காணொளிகள் நம்மை வாயடைக்கச் செய்கிறது. ட்ரெண்டிங் என்று சொல்லிக்கொண்டு கிரிஞ்ச் செய்வது முதல் பொது இடங்களில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் செயல்கள் செய்வது வரை நெட்டிசன்களின் பல வைரல் காணொளிகள் இணையத்தை ஆட்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பில் இருக்கும்போதே கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தமிட்டுக்கொள்ளும் காணொளி இணையத்தையே தீப்பிடிக்க வைத்துள்ளது.
X தளத்தில் அண்மையில் வெளியான ஒரு காணொளியில் பள்ளி மாணவர் மற்றும் மாணவி வகுப்பறையின் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே இருவரும் கட்டியணைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொள்கின்றனர். அருகில் மற்ற மாணவர்கள் அமர்ந்திருந்தாலும் அதனைக் கண்டுக்கொள்ளாமல் தகாத செயல்களில் ஈடுபட்டனர். இதனை அருகிலுள்ள ஒரு மாணவர் மறைமுகமாக தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த காணொளி வைரலாகி வருகிறது. சீருடையை வைத்து காணொளியில் வரும் பள்ளி நொய்டாவில் இருப்பதாகத் தகவல்கள் பரவினாலும் சரியான ஊர் எது என்று அதிகாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளையும் ஆதங்கத்தையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாலிவுட் சினிமா மற்றும் வெப் சீரிஸ்கள்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் காரணமாக இருப்பதாகக் கூறுகின்றனர். அதாவது பாலிவுட் வெப் சீரிஸ்களில், பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பள்ளிகளில் சில்மிஷம் செய்வதுபோல காட்சிகள் அமைகிறது. இது மாணவர்களின் மனதை கலங்கப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
இன்னும் சிலர் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் அந்தக் காலம் போல் மாணவர்களிடம் கண்டிப்பாக இல்லாமலும் எதையுமே கண்டுகொள்ளாமல் இருப்பதாலும்தான் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள், நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால், தவறான பழக்கவழக்கங்களைதான் கற்று வருகின்றனர் என வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான கங்குவா ட்ரெய்லர்
இப்படியான சம்பவங்கள் நிகழ்வது இது ஒன்றும் முதன்முறை அல்ல. நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் மற்றும் மாணவி முத்தம் கொடுத்துக்கொள்ளும் சிசிடிவி காணொளி அண்மையில் வைரலாகி இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடக்கும்போது பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காததே காரணம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?