GOAT Trailer: கோட் ட்ரெய்லர் ரெடி... விஜய் ரசிகர்களுக்கு தாறுமாறான அப்டேட் கொடுத்த படக்குழு!

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரெய்லர் குறித்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி செம மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

Aug 12, 2024 - 19:19
Aug 13, 2024 - 09:35
 0
GOAT Trailer: கோட் ட்ரெய்லர் ரெடி... விஜய் ரசிகர்களுக்கு தாறுமாறான அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் லியோ 300 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் கோட் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.

கோட் படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்களும், விஜய்யின் கிளிப்ஸ் வீடியோவும் மட்டுமே வெளியாகியுள்ளது. கோட் வெளியாக இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ளதால், இப்படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது கோட் ட்ரெய்லரும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தான். விஜய் விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதால், இசை வெளியீட்டு விழாவில் அவரது குட்டி ஸ்டோரி படத்துக்கு ப்ரோமோஷனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோட் இசை வெளியீட்டு விழா பற்றி படக்குழு இன்னும் முடிவு செய்யவில்லை.

அதேநேரம் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்து தரமான அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு. கோட் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ரசிகர்களாகிய உங்களுக்காக தரமான ட்ரெய்லர் ரெடியாகிவிட்டது. அதனால் தயவுசெய்து இரண்டு நாட்கள் அமைதிகாக்கவும். நாளை (ஆக.13) இதுபற்றி அபிஸியலாக அப்டேட் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக ஆகஸ்ட் 20ம் தேதிக்குப் பின்னரே கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகிவிட்டது படக்குழு. 

மேலும் படிக்க - ஆணவக்கொலை விவகாரம்... ரஞ்சித் மீது விசிக சார்பில் புகார்

சூர்யாவின் கங்குவா பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வரும் நிலையில், அதே வேகத்தில் கோட் ட்ரெய்லர் பற்றியும் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி கோட் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விஜய்யின் கோட் ரிலீஸாகும் 5ம் தேதி, வேறு எந்த படங்களும் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இதனால் சிங்கிளாக களமிறங்கும் கோட் பாக்ஸ் ஆபிஸில் தெறி மாஸ் ஹிட் அடிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் கோட், ஃபேமிலி சென்டிமென்ட்டில் ஆக்ஷன் ஜானர் மூவியாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை ஐமேக்ஸ், EPIQ ஆகிய ஸ்க்ரீன்களில் வெளியாகும் என்பதையும் படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ட்ரெய்லர் அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow