தட தடக்கும் தவெக மாநாடு.. அழைப்பு விடுத்த விஜய்..விக்கிரவாண்டிக்கு வரும் அரசியல் தலைவர்கள்!

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருமாறு ராகுல்காந்திக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Sep 3, 2024 - 10:32
Sep 4, 2024 - 10:11
 0
தட தடக்கும் தவெக மாநாடு.. அழைப்பு விடுத்த விஜய்..விக்கிரவாண்டிக்கு வரும் அரசியல் தலைவர்கள்!
vijay rahul gandhi


தமிழக வெற்றி கழகத்தினுடைய முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை பகுதியில் நடத்த விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அனுமதி கேட்டு மனு அளித்திருந்த நிலையில், காவல்துறை சார்பில் மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் நடைபெற உள்ளது என்பன உள்ளிட்ட 21 கேள்விகளை கேட்டு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் லோக்சபா எதிர்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் விஜய் கோட் படத்தின் ரிலீஸ்காக காத்துக்கொண்டிருக்கிறார்.தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்கள்தான் கோட் பட ரிலீஸ்காக ரசிகர்கள் கொண்டாட தயாராக உள்ளனர். இன்னும் ஒரே ஒரு படம்தான் அத்துடன் திரை உலகத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு அரசியல் வாழ்க்கையில் முழு மூச்சுடன் இறங்கப்போகிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று பனையூர் கட்சி அலுவலகத்தில் தவெக கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.


2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் விஜய், அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் மாநாடு என்பதால், பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில்  100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

தவெக மாநாட்டுக்கான அனுமதி கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், எஸ். பி. அலுவலகத்திலும் கடந்த 28 ஆம் தேதி மனு அளித்திருந்தார். இந்த நிலையில் விஜய் மாநாட்டிற்கு பாதுகாப்பு அரன் பார்கிங் வசதி என்ன என்ன தயார் செய்யப்படுகின்றன உள்ளிட்ட 21 கேள்விகளுடன் விழுப்புரம் டி எஸ் பி பார்த்திபன் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுசெயலாளர் அனந்த்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் மாநாட்டிற்கு பாதுகாப்பு அரன் பார்கிங் வசதி என்ன என்ன தயார் செய்யப்படுகின்றன உள்ளிட்ட 21 கேள்விகளுடன் விழுப்புரம் டி எஸ் பி பார்த்திபன் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுசெயலாளர் அனந்த்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது? மாநாடு அமைக்க நடைபெறும் மேடை எத்தனை அடி நீளம் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

எந்த பகுதியிலிருந்து எவ்வளவு பேர் வருகை புரிவார்கள்.இருக்கைகள் எவ்வளவு அமைக்கப்பட உள்ளது?பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு மாநாட்டில் வாகனங்கள் நிறுத்த எந்த பகுதிகள் ஒதுக்கி பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது என்று கேட்கப்பட்டுள்ளது சென்னை மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு  பார்கிங் வசதி எவ்வாறு செய்யபடுகிறது? உணவு வசதி என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? பார்சல் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதா? உணவு சமைத்து வழங்கப்பட உள்ளதா என்றும் கேட்கப்படுகிறது. 

மாநாட்டில் பங்கேற்க வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் வந்தால் குடிநீர்  வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது என 21 கேள்விகள் எழுப்பட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளன?இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முறையாக பதிலளிக்கும் பட்சத்தில், காவல்துறை அனுமதியை வழங்கும் என கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க விஜய் மாநாட்டில் பல மாநில முதல்வர்கள், மிகப்பெரிய கட்சியின் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி மதுரையில் தொடங்கும்போது கமல்ஹாசன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்து வந்து மாநாட்டில் பங்கேற்க வைத்தார். அதே பாணியில், விஜய்க்கு நெருக்கமாக உள்ள மாநில முதல்வர்களை அழைத்து வந்து விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்க வைக்க விஜய் தரப்பு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் கட்சி தொடங்கும் முன்பே தம்பி என்று பங்காளி பாசம் காட்டிய சீமான், திடீரென ஒதுங்கி விட்டார். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் சில தினங்களுக்கு முன்பு சீமான் அறிவித்து விட்டார் என்பதால் மாநாட்டில் அவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை தெரிகிறது. 

அதே நேரத்தில் தவெக மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஏற்கனவே பேசப்பட்டுள்ளதாம். இதே போல  கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரையும் அழைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.திமுக தோழமை கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தியை மாநாட்டிற்கு அழைத்து வர விஜய் விரும்புவதாகவும் இது குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விஜய் பேசியுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல்காந்தி எதிர்கட்சி தலைவராக கடந்த மே மாதம் தேர்வு செய்யப்பட்ட போது,விஜய் வாழ்த்து கூறினார்.அதற்கு ராகுல்காந்தி நன்றி கூறி பதிவிட்டிருந்தார். 
கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல்காந்தியை நேரடியாக சந்தித்து பேசியுள்ளார் விஜய். அப்போதே அவரது அரசியல் பயணம் தொடங்கும் என்று பேசப்பட்டது. 
இந்த சந்திப்பு பற்றி சமீபத்தில் பேசிய விஜயதாரணி, நீங்கள் தனிக் கட்சி ஆரம்பித்தால் பெரிய தலைவராக வருவீர்கள் என விஜய்யிடம் ராகுல் காந்தி கூறினார். அது நடந்து பல ஆண்டுகள் கழித்து விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். ஆகவே, விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு ராகுல் காந்திதான் காரணம்” என்று தெரிவித்திருந்தார்.இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே ராகுல் காந்தியை தவெக மாநாட்டில் பங்கேற்க வருமாறு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்தி வரும் பட்சத்தில்  அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இது தவிர சர்தார் திரைப்படத்தில் வருவது போல முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், திரை உலக பிரபலங்கள் பலரும் பிரபல கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் விஜய் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியுள்ளன. விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள முதல் மாநாடு விஜய்க்கு வெற்றியை கொடுக்குமா இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow