இந்தியா-அமெரிக்கா பொருளாதார உறவில் எழுச்சி... சான் பிரான்சிஸ்கோவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உயர் கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருவதாக சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Aug 30, 2024 - 10:09
 0
இந்தியா-அமெரிக்கா பொருளாதார உறவில் எழுச்சி... சான் பிரான்சிஸ்கோவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
இந்தியா-அமெரிக்கா பொருளாதார உறவில் எழுச்சி... முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தற்போது சான்  பிரான்சிஸ்கோவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 2ம் தேதி வரை அங்கு இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சான்  பிரான்சிஸ்கோவில் நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர் கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். 

இந்தியாவிலேயே வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் செயற்கை நுண்ணறிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஏராளமான முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவு எழுச்சி கண்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது திட்டத்தை தொடங்கி உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.

மேலும் படிக்க: பாலியல் குற்றச்சாட்டில் கைதான சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 7 நாள் பரோல்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த இந்த மாநாடு உதவும். புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பல நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow