தவெக மாநாடு..21 கேள்விகள் கேட்டு 5 நாட்கள் அவகாசம் கொடுத்த போலீஸ்.. என்ன செய்யப்போகிறார் விஜய்

விஜய் மாநாட்டிற்கு பாதுகாப்பு அரன் பார்கிங் வசதி என்ன என்ன தயார் செய்யப்படுகின்றன உள்ளிட்ட 21 கேள்விகளுடன் விழுப்புரம் டி எஸ் பி பார்த்திபன் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுசெயலாளர் அனந்த்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Sep 2, 2024 - 11:35
Sep 3, 2024 - 10:24
 0
தவெக மாநாடு..21 கேள்விகள் கேட்டு 5 நாட்கள் அவகாசம் கொடுத்த போலீஸ்.. என்ன செய்யப்போகிறார் விஜய்
vilupuram police asks 21 questions for vijay tamilaga vetri kalaga manadu

தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, அதற்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது. தவெக மாநாடு முன்னேற்பாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி விக்கிரவாண்டி காவல்துறை கடிதம் வழங்கியுள்ளது.பதில் அளிக்க 5 நாட்களுக்கு அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 

கோட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் 69வது படத்திற்காக தயாராகி வருகிறார்.இதனையடுத்து அரசியலில் முழு வீச்சில் களமிறங்கப்போகிறார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு தொண்டர்களை தயார்படுத்தும் வகையில் தவெகவின் முதல் மாநாட்டினை நடத்தப்போகிறார். 
இந்த மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது.இதனையடுத்து காவல்துறையினர் இந்த இடத்தை நேரில் சென்றும் பார்வையிட்டனர்.

இந்த நிலையில் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் மற்றும் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதற்கான வழி, வாகனங்கள் வந்து செல்லும் வழி, வாகன நிறுத்துமிடம், உணவு, கழிவறை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் எழுப்பி விக்கிரவாண்டி காவல்துறையினர் தவெக கட்சியினருக்கு கடிதம் வழங்கியுள்ளனர்.

விஜய் மாநாட்டிற்கு பாதுகாப்பு அரன் பார்கிங் வசதி என்ன என்ன தயார் செய்யப்படுகின்றன உள்ளிட்ட 21 கேள்விகளுடன் விழுப்புரம் டி எஸ் பி பார்த்திபன் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுசெயலாளர் அனந்த்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது? மாநாடு அமைக்க நடைபெறும் மேடை எத்தனை அடி நீளம் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

எந்த பகுதியிலிருந்து எவ்வளவு பேர் வருகை புரிவார்கள்.இருக்கைகள் எவ்வளவு அமைக்கப்பட உள்ளது?பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு மாநாட்டில் வாகனங்கள் நிறுத்த எந்த பகுதிகள் ஒதுக்கி பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது என்று கேட்கப்பட்டுள்ளது.

சென்னை மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு  பார்கிங் வசதி எவ்வாறு செய்யபடுகிறது? வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்தால் குடிநீர்  வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது என 21 கேள்விகள் எழுப்பட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளன?என்பன உள்ளிட்ட 21 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.இதற்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முறையாக பதிலளிக்கும் பட்சத்தில், காவல்துறை அனுமதியை வழங்கும் என கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow