தவெக மாநாடு செப்.23ல் நடக்குமா? விஜய்க்கு செக் வைக்கும் போலீஸ்.. ஜோதிடரை நாடிய புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வரும் 23ஆ ஆம் தேதி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.காவல்துறையின் அனுமதி கிடைக்காவிட்டால் அடுத்து எப்போது நடத்துவது என்று ஜோதிடருடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sep 2, 2024 - 11:05
Sep 3, 2024 - 10:24
 0
தவெக மாநாடு செப்.23ல் நடக்குமா? விஜய்க்கு செக் வைக்கும் போலீஸ்.. ஜோதிடரை நாடிய புஸ்ஸி ஆனந்த்
tamilaga vetri kalaga manadu date change

தமிழக வெற்றி கழகத்தினுடைய முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை பகுதியில் நடத்த விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அனுமதி கேட்டு மனு அளித்திருந்த நிலையில், காவல்துறை சார்பில் தமிழக வெற்றி கழகத்தினுடைய மாநாட்டில் யார்யார்கள் கலந்து கொள்வார்கள், எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் நடைபெற உள்ளது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை கேட்டு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய். இதன் அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஜய், அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் மாநாடு என்பதால், பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்து, திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், ஈரோடு என பல்வேறு இடங்களை பரிசீலித்த பிறகு, விக்கிரவாண்டியை இறுதி செய்திருக்கிறார். செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதற்காக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

தவெகமாநாட்டுக்கான அனுமதி கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், எஸ். பி. அலுவலகத்திலும் கடந்த 28 ஆம் தேதி மனு அளித்திருந்தார். அதே நாளில் ஏ.டி. எஸ்.பி. திருமால், டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தின்  காவல்துறை கண்காணிப்பாளர் தீபக்  சிவாச் கடந்த சில நாட்களாக விடுமுறையில் இருந்த நிலையில் இன்று தான் மீண்டும் பணிக்கு வந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அனுமதி கேட்டு மனு அளித்திருந்த நிலையில், காவல்துறை சார்பில் தமிழக வெற்றி கழகத்தினுடைய மாநாட்டில் யார் யார் கலந்து கொள்வார்கள், எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் நடைபெற உள்ளது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை கேட்டு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அந்த கட்சிக்கு வருகின்ற 23ஆம் தேதி விசாலை பகுதியில் மாநாடு நடத்த அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்ற விவரம் விரைவில் தெரிய வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டுமே 5 ஏக்கர் நிலம் மாநாட்டுக்கு வந்து செல்ல 3 வழிகள், உணவு, குடிநீர், கழிவறை, ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுப் பகுதியில் காவல்துறையின் பாதுகாப்பும், தீயணைப்புத்துறையின் ஒத்துழைப்பும் வேண்டும் என்று கோரியுள்ளனர். மாநாட்டுக்கு தேர்வாகியுள்ள இடம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் அருகிலேயே, 300 மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மாற்று தேதி குறிப்பதற்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை சந்தித்ததாக தகவல் வெளியானது. அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

மாநாட்டுக்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. தை மாதத்திற்கு பிறகு மாநாடு தேதியை குறிக்க புஸ்ஸி ஆனந்த் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் திட்டமிட்ட தேதியில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow