Bhanu Saptami 2024 : பதவி யோகம் தரும் பானு சப்தமி.. அமைச்சர் பதவி வேண்டி சிறப்பு வழிபாடு செய்த ராமநாதபுரம் எம்எல்ஏ

Aadi Month Bhanu Saptami 2024 : அமைச்சரவையில் இன்னும் சில நாட்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு சிநேகவல்லி உடனாய ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் ராமநாதபுரம் தொகுதி(Muthuramalingam MLA) எம்எல்ஏ காதர்பாட்சாமுத்துராமலிங்கம்.

Aug 12, 2024 - 08:59
Aug 13, 2024 - 09:38
 0
Bhanu Saptami 2024 : பதவி யோகம் தரும் பானு சப்தமி.. அமைச்சர் பதவி வேண்டி சிறப்பு வழிபாடு செய்த ராமநாதபுரம் எம்எல்ஏ
bhanu Saptami mla Katharbatcha Muthuramalingam

Aadi Month Bhanu Saptami 2024 : பானு சப்தமி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனை வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.  சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். உயர்பதவிகள் தேடி வரும் என்பது நம்பிக்கை. நேற்றைய தினம் பானுசப்தமி விரதம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சாமுத்துராமலிங்கம் திருவாடானையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற  அருள்மிகு சிநேகவல்லி உடனாய ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில்தனது ஆதரவாளர்களுடன் வந்து சிறப்பு வழிபாடு செய்தார்.

இது குறித்து கோயிலில் இருந்த சிவாச்சாரியார்கள் கூறுகையில், 300 நாமம் வாசித்து வழிபடும் நிகழ்வு திருசதி என்று அழைக்கப்படுகிறது. இந்த வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் நன்மைகளும் பதவி உயர்வு கிடைக்கும் என்று தெரிவித்தனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்(Muthuramalingam MLA) தனது பதவி உயர்வுக்காக சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தார் என்று கூறினார்.

பானு சப்தமி சிறப்பு: 

சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு. அதுவும் சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் பானு சப்தமி(Bhanu Saptami 2024) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது. பானு சப்தமி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.

உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. 

சூரிய நமஸ்காரம்: 

ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும்  சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். 

பானு சப்தமி நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டு வரும். மற்ற தினங்களில் செய்யும் தான தர்மங்களை விடவும் இந்த தினத்தில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். 

உயர்பதவி தேடி வரும்: 

அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன்,சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனீஸ்வர பகவானும் ஆவர். அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள் பானு சப்தமியில்(Bhanu Saptai 2024)சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும். பானு சப்தமி நாளில் சூரியனை வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும். பானுசப்தமியில் சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும் எனவேதான் நேற்றைய தினம் சிறப்பு வாய்ந்த நல்ல நாளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டுள்ளார் எம்எல்ஏ காதர்பாட்சாமுத்துராமலிங்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow