திமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம்.. முதல்வர் தமிழ்நாட்டுக்கு வரட்டும் அப்பறம் இருக்கு.... அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

“அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார். தலைமை இங்கு இல்லையே என்ற ஏக்கம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Sep 12, 2024 - 18:39
Sep 13, 2024 - 09:52
 0
திமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம்.. முதல்வர் தமிழ்நாட்டுக்கு வரட்டும் அப்பறம் இருக்கு.... அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
முதல்வர் தமிழ்நாட்டுக்கு வரட்டும் அப்பறம் இருக்கு.... அமைச்சர் துரைமுருகன் பேச்சு

பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை கடந்து இந்த ஆண்டு பவள விழாவை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படவுள்ளது. இது திமுகவின் பவள விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா சென்னை நந்தனம், YMCA மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கட்சியினர் அனைவரும் தங்களுடைய வீடுகளில் திமுக கொடி ஏற்ற வேண்டும். 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் அனைவரும் கருப்பு சிவப்பு வண்ணத் துண்டை அணிந்து செல்ல வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை போது அனைவரும் கடைசி வரை இருக்க வேண்டும். ஒரு ஓட்டு என்பது கூட முக்கியமானது. காட்பாடி தொகுதியில் பொருத்தவரை உழைத்தோம் ஆனால் அதிகமான நேரத்தில் ஓய்வு எடுத்து விட்டோம். இப்பொழுது உள்ள முறைகள் சரியில்லை. 

வருகிற 20 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் நான் நேரில் வந்து மக்களுடைய குறைகளை கேட்டு அதை தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். பழைய வாக்குச்சாவடி முகவர்கள் சரியில்லை என்றால் அவர்களை நீக்கிவிட்டு புதிய முகவர்களை சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் காட்பாடி தொகுதியில் பழைய முறைப்படி தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலைமை மீண்டும் ஏற்படும். கடந்த முறை என்ன நடந்தது? தோற்றுவிடுவோம் என்ற நிலை இருந்தது. அதை நான் சவாலாக எடுத்துக் கொண்டேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஏன் அனைத்து தொகுதிகளிலும் சொல்லவில்லை என்றால் முப்பத்தி நாnகு தொகுதி  எதிர்க்கட்சியிர்களுக்கு வரட்டுமே என்ற எண்ணம் தான். முதலமைச்சர் ஸ்டாலின் அமைதியாக இருந்து வெற்றி வெற்றி பெற்று விடுவார். இப்பொழுது புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும். அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார். தலைமை இங்கு இல்லையே என்ற ஏக்கம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என கூறினார்.

மேலும் படிக்க: “தனது மகன்களை தவறாக சித்தரிக்கின்றனர்..” பாடகர் மனோவின் மனைவி கண்ணீர்!

தொடர்ந்து பேசிய அவர், “வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் ஒளிமயமான எதிர்காலம் வந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow