Singer Mano: “தனது மகன்களை தவறாக சித்தரிக்கின்றனர்..” பாடகர் மனோவின் மனைவி கண்ணீர்!
எனது மகன்கள் தலைமறைவாக இல்லை, ஆனால் அவர்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளவர் பாடகர் மனோ. ஜூனியர் எஸ்பிபி என ரசிகர்களால் கொண்டாடப்படும் மனோ, சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மனோவின் மகன்கள் இருவரும், 16 வயது சிறுவனை மது போதையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முந்தினம் இரவு கால்பந்து பயிற்சி செய்துவிட்டு சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது அவருக்கும் மனோவின் மகன்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனோவின் மகன்கள் சாஹிர், ரபீக் உட்பட அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து, 16 வயது சிறுவன் கிருபாகரனை மது போதையில் தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. மேலும், இந்தச் சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மனோவின் மகன்கள் சாஹீர், ரபிக் ஆகிய இருவரையும் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனோவின் மகன்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் தனிப்படை போலீசார் மனோவுக்கு நெருக்கமானவர்களின் பண்ணை வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மனோ மகன்களின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், சிக்னலை கண்காணித்து கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனது மகன்களை தவறாக சித்தரிப்பதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தன்னையும் தனது மகன்களையும் 10க்கும் மேற்பட்டவர்கள் தாக்கினார்கள். இதில் நான், எனது மகன்கள் அவரது நண்பர்கள் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால், அவர்களுக்கு அது பிரச்சனையில் முடியும் என தாய் உள்ளத்துடன் புகார் அளிக்க வேண்டாம் என இருந்தேன்.
மேலும் படிக்க - மீண்டும் இணைந்த வடிவேலு – சுந்தர் சி கூட்டணி!
அதேநேரம், எனது மகன்கள் தலைமறைவாக இல்லை. ஆனால், தொடர்ந்து எனது மகன்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதால், அவர்கள் அவமானத்தில் வெளியே சென்றிருக்கலாம். தற்போது வரை மகன்கள் எங்கு இருக்கிறார்கள் என எங்களுக்கு தெரியவில்லை. நேற்று முன்தினம் தனது மகன்களின் நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களை வழியனுப்ப தானும் எனது மகன்களும் வெளியே வந்தோம் அப்போது சிலர் எங்களையே குருகுரு என பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் தனது மகன் ஏன் பார்க்கிறாய் என கேட்டதற்கு, தகாத வார்த்தையால் பேசியதோடு, சினிமாகாரர்கள் தானே தெலுங்கு கொல்டி என கேவலமாக பேசினர்.
பின்னர் அவர்கள் 15க்கும் மேற்பட்டோருடன் திரும்பி வந்து எங்களை தாக்கினர். அப்போது நான் தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலிஸாரை வரவழைத்தோம். எனது கணவரும் நானும் பிரச்சினையை பெரிதுப்படுத்த வேண்டாம்; போலிஸில் புகார் அளித்தால் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு பிரச்சினையாகி விடும் என தாயுள்ளத்துடன் புகார் செய்யவில்லை. எதிர் தரப்பினர் தாக்கியதில் எனக்கும் எனது மகன்கள் அவரது நண்பர்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. மகனின் நண்பருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது. எனக்கு கை, முகத்தில் காயம்... மகன்களுக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறோம். தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம் எனவும் மனோவின் மனைவி ஜமிலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
What's Your Reaction?